நிகழ்வுகள் நினைவாக
நிகழ்வுகள் நினைவாக, ஆ. செந்தில்வேலு, காந்தகளம், சென்னை, விலை 75ரூ.
வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும், கண்ணில் பார்த்த சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து கதை எழுதும் எழுத்தாளர்கள், சிறந்த படைப்பாளிகளாக விளங்குகிறார்கள். “நிகழ்வுகள் நினைவாக” என்ற இந்த சிறுகதைத் தொகுதியை எழுதியுள்ள ஆ. செந்திவேலு, அத்தகைய எழுத்தாளர்களில் ஒருவர். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆசிரியர் எழுதியுள்ள 11 கதைகள், இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ளன. நல்ல நடையில், விறுவிறுப்பாக எழுதுவதில் ஆ. செந்தில்வேலுவுக்கு உள்ள ஆற்றலை இக்கதைகள் புலப்படுத்துகின்றன. நன்றி: தினத்தந்தி, 23/12/2015.
—-
இன்பத் தமிழகம், பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.
இன்பத் தமிழகம் பண்டை நாளில் எவ்விதமிருந்தது. இன்று எந்த நிலையை அடைந்திருக்கிறது. இனி எதிர்காலத்தில் ஏற்றமடைய என்ன செய்ய வேண்டும் என்பவை பற்றி சிலம்புச் செல்வர் ம.பொ.சிவ ஞானம் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு நூல். இதில் தமிழகம், மொழி, சாதி வேற்றுமை ஒழிய வழி முதலியவை பற்றிய கருத்து நிறைந்த பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 23/12/2015