நிமிர்ந்து நில்
நிமிர்ந்து நில், குன்றில் குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-4.html
நீதிக்காகவும், நேர்மைக்காகவும், சுயஉரிமைக்காகக் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வரும்போது நிமிர்ந்து நின்றால், அது வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும் என்ற உயர்ந்த கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல். சுவாமி விவேகானந்தர், இந்திராகாந்தி, லெனின், சுபாஷ் சந்திரபோஸ் உட்பட பல்வேறு அறிஞர்களின் வாழ்க்கை அனுபவங்களும் இடம் பெற்றுள்ளன. வாழ்க்கையில் நிமிர்ந்து நின்று சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு உதவிகரமாக இருக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 19/3/2014.
—-
சங்க இலக்கிய மெய்யியல், கோவைவாணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை 98, பக். 116, விலை 90ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-5.html
மனிதனுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்தின் இருப்பையும், இயக்கத்தையும், தோற்றத்தையும், அழிவையும், வளர்ச்சியையும் ஆராய்ந்து, அவை தொடர்பான பொதுவான உண்மைகளைக் கண்டறிந்து, அதிலிருந்து சில முடிவுகளுக்கு வந்து உலகை விளக்கும் முறையியலையே தமிழில் மெய்யியல் என்றும் வடமொழியில் தத்துவம் என்றும் சொல்கிறோம். தொல்காப்பியத்திலும் பிற சங்க இலக்கியங்களிலும் மெய்யியல் கருத்துகள் உள்ளன என்றாலும் நாளைய மானுடம் அறிந்துகொள்ள வேண்டிய மெய்யியல் கருத்துகள் புறநானுற்றுப் பாடல்களில்தான் ஏராளமாகப் பொதிந்திருக்கின்றன. அப்பாடல்களின் துணையுடன் மெய்யியலை ஆராய்ந்து, எளிய நடையில் விளக்கியுள்ளார் நூலாசிரியர். நூலில் நான்கு கட்டுரைகள் உள்ளன. மெய்யியல் கட்டுரை தவிர, புலன் கடந்த பொருளியல் (Metaphysics) என்ற தலைப்பின் கீழ் கடவுள் நம்பிக்கை, மறுபிறப்புக் கோட்பாடு, ஊழ்க்கோட்பாடு, கூற்றம், பேய், நிமித்தம் போன்றவையும் அழகியல்(Aesthetics) என்ற தலைப்பின் கீழ் இசை, இசை தொடர்பாக மாந்தர்கள், கற்பனை, அணி உள்ளிட்டவையும், அறவியல் (Ethics) என்ற தலைப்பின் கீழ் அறம், தர்மம், விருந்தோம்பல், உடன்கட்டை ஏறுதல், போர், துறவறம் போன்றவையும் விளக்கப்பட்டுள்ளன. தமிழர் தம் மெய்யியலை அறிந்து கொள்ளவும், ஆய்வு செய்யவும் முனைவோருக்கு பேருதவி புரியும் நூல். நன்றி: தினமணி, 17/3/2014.