நிழல் இளவரசி
நிழல் இளவரசி, மதுரம் சுந்தரேசன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 512, விலை 250ரூ.
இந்து சுந்தரேசன், ஆங்கிலததில் எழுதிய ஷேடோ பிரின்சஸ் என்ற வரலாற்று நாவலை, அவரது தாயார் மதுரம் சுந்தரரேசன் மூலக்கதையை படிப்பது போன்றே, கற்பனை வளத்துடன் கூடிய, முகலாய சரித்திரக் காதல் கதையை, மிகவும் சாதுர்யமாக மொழி பெயர்ப்பு செய்துள்ளார். பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், அவுரங்கசீப் ஆகிய அறுவரும், முகலாய சாம்ராஜ்யத்தின் வரலாற்று நாயகர்கள் என்றால், நூர்ஜஹான், மெகருனிசா, மும்தாஜ், ஷாஜஹான்-மும்தாஜின் மகள் ஜஹனாரா ஆகியோர் வரலாற்றை அழகு செய்யும் நாயகிகளாவார். மும்தாஜ் பதினாலாவது குழந்தையை பிரசவிக்கும் காட்சியில் துவங்கும் புதினம், புகழ் பெற்ற ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்ரவர்த்தி ஷாஜஹான், ஒரு பரம ஏழை போல் மரணமடைந்து, மிக சாதாரணமாக கல்லறைக்கு செல்வது முடிய, மிக ரம்மியமாக கதையை பவனி வர செய்துள்ளார் நூலாசிரியர். வரலாற்று குறிப்புகளுடன், வலம் வரும் இந்நாவல் மொழிபெயர்ப்பின் மூலம் மூல நாவலை படிக்கத்தூண்டும் அரிய படைப்பு. -பின்னலூரான்.
—-
கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை வரலாறு, சக்தி கே. கிருஷ்ணசாமி, பத்ம சக்தி, பக். 64, விலை 50ரூ.
ஒருவரது வல்வினைகள் தீர, அவர்கள் கொல்லூர் சென்று அன்னை ஸ்ரீ மூகாம்பிகையை தரிசிக்க வேண்டும் என்பது நீண்ட நெடுமொழி. சிவன் எனும் பெரும் ஆதி சக்தியோடு சேரின் எத்தொழிலும் வல்லது என்ற சங்கர மாமுனியின் அருள் வார்த்தைகளை மெய்பிக்கும் தலம் குறித்த தகவல்களை, சிறப்பாக வெளியிட்ட ஆசிரியர் முயற்சிகளுக்கு பாராட்டுதல்கள். நன்றி: தினமலர், 23/2/2014.