நேர்மையாக சம்பாதிக்க இவ்வளவு வழிகள்
நேர்மையாக சம்பாதிக்க இவ்வளவு வழிகள், சோம. வள்ளியப்பன், ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 115ரூ.
சேலைக்குப் போய்த்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. சுயமாக தொழில், வியாபாரம் தொடங்கி, அதில் மிகப்பெரிய வெற்றி பெற முடியும். வியாபாரத்தை தொடங்கி வெற்றிபெற வாய்ப்புகளை கண்டுபிடிக்கிற பார்வையும், செய்து பார்க்கிற துணிவும், தளராத மனமும் போதும். நேர்மையாக சம்பாதிக்க முடியும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்தி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 4/6/2014.
—-
Employment Education, அருண்குமார், ஹித்யா பப்ளிகேஷன், கோயம்புத்தூர், விலை 600ரூ.
கல்வியைப் பொறுத்தவரை பல படிப்புகள் பரவிக்கிடக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட துறைகள் மட்டும் மாணவர்களை சென்றடைந்துள்ளன, அல்லது அவர்களை கவர்ந்துள்ளன. என்ஜினீயரிங் துறையில் ஆவர்ம் உள்ள மாணவர்களுக்குக் கூட, அதிக வருமானம் தரும் படிப்பு என்ற மாயையை ஏற்படுத்தியுள்ள சிவில், மெக்கானிக்கல், இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்றவை தவிர மேலும் எத்தனைப் பாடப்பிரிவுகள் இருக்கிறது என்பது தெரியுமா என்றால் சந்தேகம்தான். அந்தக் குறையைப் போக்கும்வகையில் இந்த நூலை, அதன் ஆசிரியர் வெளியிட்டுள்ளார். பலருக்கும் தெரியாத பாடப்பிரிவுகள், அவற்றில் இருக்கும் வேலை வாய்ப்புகள், அதில் சேர்வதற்கான வழிமுறைகள் என அனைத்தும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கென்றே செயல்படும் இந்திய அளவிலான கல்லூரி, பல்கலைக்கழகங்கள், அதிலுள்ள படிப்புகள், கல்விக்க சில நிறுவனங்கள் வழங்கும் உதவித்தொகைகள், அவற்றை பெறும் வழிமுறைகள் என பல அரிய தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 4/6/2014.