பண்டிகைக்கால சைவ சிற்றுண்டி வகைகள்
பண்டிகைக்கால சைவ சிற்றுண்டி வகைகள், மீனா சங்கரன், லியோ புக் பப்ளிஷர்ஸ், விலை 100ரூ.
இந்திய பண்டிகைகள் பல்வேறு நலமிக்க உணவுகளை கொண்டதாக அமைக்கப்பட்டிருககிறது. காலம்காலமாக போற்றப்படும், இந்த பண்டிகை உணவுகள் தயாரிப்பை, இந்த நூலில் காணலாம். சுய்யன், கர்ச்சிக்காய், வெல்ல அடை, ஆல் இன் ஒன் மிக்சர் என்ற பல தயாரிப்புகளை, சமையலறையில் சவையுடன் தயாரிக்க, இந்த நூல் பெரிதும் உதவிடும்.
—-
பெருமைமிகு சௌராஷ்டிர சமூகம் – ஓர் அறிமுகம், கே. ஆர். சேதுராமன், மல்லிகை புக் சென்டர், ரயில்வே ஸ்டேஷன் எதிரே, மதுரை 625001, பக். 58, விலை 75ரூ.
விஜயநகர ஆட்சியில் மதுரையில் குடியேறிய சௌராஷ்டிரர்கள், மதுரை மண்ணுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பவர்கள். சுங்குடிச் சேலை என்பது மட்டுமல்ல, மதுரை காந்தி என்று அழைக்கப்பட்ட என்.எம்.ஆர். சுப்புராமன் உட்பட பல சமுதாயத் தலைவர்களை உருவாக்கிய சமுதாயம். திருமணத்தில் வரதட்சணை கேட்கும் பழக்கம் அற்றவர்கள். ஆண் சமையற்காரர்கள் இல்லாத புதுமை உடையவர்கள் என்று, இச்சமூகம் குறித்த பல்வேறு தகவல்கள் இந்த நூலில் சிறப்பாக பதிவாகி உள்ளது. மதுரை நகருடன் இணைந்து வாழும், ஒரு அமைதியான சமூகத்தின் பெருமைகளை, இந்த நூலில் காணலாம். நன்றி: தினமலர், 16/6/2013.