பல்லவர் பாண்டியர் அதியர் குடைவரைகள்
பல்லவர் பாண்டியர் அதியர் குடைவரைகள், மு. நளினி, ரா. கலைக்கோவன், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 352, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-9.html
வரலாற்று ஆய்வில் பாறைச் சிற்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தின் ஆதி வரலாற்றை அறிய உதவுபவையாக குடைவரைக் கோயில்களும், பாறைகளும், கல்வெட்டுகளும் உள்ளன என்பதற்கு ஆதாரமாக நூலாசிரியர்கள் தங்களது கள ஆய்வுகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளனர். சிங்கப் பெருமாள் கோயில் குடைவரை கட்டுரையில் பெருமாளைத் தரிசிக்கும் ஆடவர் திருவுருவத்தைக் கூட விட்டுவிடாமல் குறிப்பிட்டிருப்பது நூலாசிரியர்களின் நுட்பமான ஆய்வு நோக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. திரைக்கோயில், கீழமாவிலங்கை, அறையணி நல்லூர், வெள்ளறை, நரசிம்மர், பிள்ளையார்பட்டி, மகிபாலன் பட்டி, குற்றலாம் வரை உள்ள குடைவரைகள், கல்வெட்டுகள் குறித்த தகவல்கள் புதிய செய்திகளைத் தாங்கியுள்ளன. ராஜராஜனின் ஐந்தாம் ஆண்டு கல்வெட்டு குறித்த தகவலில் தூணின் கீழ்ப்பகுதி சிதைந்திருப்பதையும் சுட்டியுள்ளனர். இதன்மூலம் குடைவரைகளை எதிர்காலத்தில் பாதுகாப்பதன் அவசியத்தையும் தொல்லியல் துறையினர் உள்ளிட்டோர் உணர்ந்து செயல்பட வேண்டும். நூலில் இடம் பெற்றுள்ள 21 குடைவரைகளில் உள்ள பொதுத்தன்மையை விரிவாக நூலாசிரியர்கள் விளக்கியுள்ளனர். குடைவரை வாசல் அமைந்த திசை, கருவறைகளின் தன்மை, இடம்பெற்றுள்ள கல்வெட்டுகள், அவை விவரிக்கும் செய்திகளின் தன்மை என மிகமிக வரலாற்று நோக்கிலும், அறிவியல் பூர்வ ஆய்வுக் கணிப்பிலும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கள ஆய்வு நிகழ்ந்த நாள், உதவியவர்கள் என அனைத்து விவரங்களையும் தந்திருப்பதும் சிறப்பாகும். இந்நூலானது தமிழ் ஆய்வாளர், சமக ஆய்வாளர், வரலாற்று ஆய்வாளர் என அனைவருமே படித்துப் பயனடையத்தக்கது மட்டுமல்ல, தமிழகத்தின் குடைவரைகள் குறித்த முழுமையான கள ஆய்வு நூலாகவும் திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை. சிறு குன்றுகளும் மலைகளும் கூட குவாரிகளாகி அழிந்துவரும் நிலையில் இதுபோன்ற ஆய்வு நூல்களே எதிர்காலத்தில் தமிழின், தமிழரின் சரித்திரத்தைப் பாதுகாக்கும் பொக்கிஷங்களாகத் திகழும் என்பதே உண்மை. நன்றி: தினமணி,20/10/2013.
—-
கம்பராமாயணம் பாலகாண்டம், மெலட்டூர் நாராயணபாரதி, ஜயஹனுமான் பதிப்பகம், பிளாட்40/3, 4 முதல் படி, வென்யூதேவ் அடுக்ககம், ராமமூர்த்தி காலனி, மூன்றாவது குறுக்குத்தெரு, திரு.வி.க.நகர், சென்னை 82, விலை 50ரூ.
கம்ப ராமாயணத்தின் பாலகாண்டம், மூலம் மட்டும் கையடக்க நூலாக வெளியிடப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, அக்டோபர் 2013.