பாண்டியர் வரலாறு

பாண்டியர் வரலாறு, பேராசிரியர் ம.ராசசேகர தங்கமணி, விகடன் பிரசுரம், சென்னை, விலை 315ரூ.

மூவேந்தர்களில் மிகப் பழமையானவர்கள் பாண்டியர்கள். நீண்ட காலம் ஆட்சி நடத்தியவர்கள். கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ்வாராய்ச்சிகள் முதலியவற்றால் இவர்களது வரலாற்றை அறிய முடிகிறது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார் ஆகியோர், பாண்டியர் வரலாறு பற்றி சிறந்த நூல்கள் எழுதியுள்ளனர். எனினும், அவர்கள் காலத்துக்குப்பின், புதிய கல்வெட்டுகள், செப்பேடுகள் பல கிடைத்துள்ளன. அவற்றையும் சேர்த்து, இந்த நூலை எழுதியுள்ளார், பேராசிரியர் ம.ராசசேகர தங்கமணி. அவர் தெரிவிக்கும் சில கல்வெட்டுச் செய்திகள் மூலம் ஆச்சரியமான தகவல்களை அறிய முடிகிறது. பாண்டியவர் வரலாறு பற்றி முக்கியமான புத்தகம் இது. ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 14/10/2015.  

—-

மக்களோடு நான், எஸ்.எஸ். சிவசங்கர், கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.

அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராகவும், குன்னம் சட்டசபை உறுப்பினராகவும் இருப்பவர், எம்.எஸ். சிவசங்கர். இவர் சமூக வலைத் தளங்களில் அவ்வப்போது பதிவு செய்த 74 கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு பதிவுக்கும் பின்னே சுவையான செய்திகள். வரலாற்றுக் குறிப்புகள், ரசனையான சம்பவங்கள். தேர்ந்த எழுத்தாளர் என்பதை நிரூபித்து இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 14/10/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *