பாரதிதாசன் கட்டுரைகள்
பாரதிதாசன் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்-பேரா. மு. சாயபு மரைக்காயர், வெளியீடு-கங்கை புத்தக நிலையம், சென்னை, விலை 90ரூ.
மொழி, நாடு, சமயம், வாழ்வியல், பல்சுவை, சமுதாயம் என்ற 6 பெருந்தலைப்புகளில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய 53 கட்டுரைகளைக் கொண்ட நூல். பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ் உணர்வையும், தமிழ் இனப்பற்றையும், எடுத்துக்காட்டும் வகையிலும், சமயப் பூசல்களையும், சாதி கொடுமைகளையும், கடவுள் மறுப்பையும், பெண்ணடிமைத்தனத்தையும், தொழிலாளர் துயரத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும் அவரது கட்டுரைகள் சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 18/6/14.
—–
கண்ணன் கதைகள், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை, விலை 130ரூ.
மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் கிருஷ்ணன் அவதாரம் முக்கியமானது. மகாபாரதத்தில் கிருஷ்ணன் செய்யும் ராஜதந்திர திருவிளையாடல்கள் நெஞ்சை நெகிழ வைக்கும். கிருஷ்ணன் இல்லையேல், மகாபாரதம் இல்லை. கிருஷ்ணன் பற்றிய கதைகளில் மிகவும் ரசமான 26 கதைகளை தேர்ந்தெடுத்து, அழகிய மாலையாக்கி இருக்கிறார் எழுத்தாளரும், அமுதசுரபி ஆசிரியருமான திருப்பூர் கிருஷ்ணன். தென்றல் போன்ற நடையில் கதைகளை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார். அவசியம் படித்து ரசிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 18/6/14.