கண்ணன் கதைகள்

கண்ணன் கதைகள், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை, பக். 134, விலை 130ரூ. கண்ணன் கதைகள் என்றாலே, கரும்பு தின்கிற மாதிரிதான். கரும்பை எங்கே கடித்தாலும் இனிக்கும். கண்ணன் கதைகளில் எதைப் படித்தாலும் மகிழ்வும், பரவசமும் கூடும். இந்த நூலில் 26 கதைகள் கண்ணன் பெருமை பேசுகின்றன. முதல் கதை, அந்த மூன்று கத்திகள். அதிலேயே, உத்தமங்க மகரிஷிக்கு மனிதரின் இனவேற்றுமை, உயர்வு தாழ்வு காண்பது தவறு என்று கண்ணபிரான் பாடம் நடத்துகிறார். அவருக்கு மட்டுமல்ல, உலகோர் அனைவருக்கும்தான். பாண்டவரை அழிக்க, […]

Read more

பாரதிதாசன் கட்டுரைகள்

பாரதிதாசன் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்-பேரா. மு. சாயபு மரைக்காயர், வெளியீடு-கங்கை புத்தக நிலையம், சென்னை, விலை 90ரூ. மொழி, நாடு, சமயம், வாழ்வியல், பல்சுவை, சமுதாயம் என்ற 6 பெருந்தலைப்புகளில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய 53 கட்டுரைகளைக் கொண்ட நூல். பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ் உணர்வையும், தமிழ் இனப்பற்றையும், எடுத்துக்காட்டும் வகையிலும், சமயப் பூசல்களையும், சாதி கொடுமைகளையும், கடவுள் மறுப்பையும், பெண்ணடிமைத்தனத்தையும், தொழிலாளர் துயரத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும் அவரது கட்டுரைகள் சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 18/6/14.   —–   கண்ணன் கதைகள், […]

Read more