பாரதியின் பார்வையில்
பாரதியின் பார்வையில், மு. ஸ்ரீனிவாசன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 60ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-291-9.html மீண்டும் ஒரு நண்பரின் நூலைத்தான் சிபாரிசு செய்கிறேன். இந்த நூல் எளிதில் கிடைக்கக்கூடியது. பாரதி தான் வாழ்ந்த சொற்ப ஆண்டுகளில் சந்தித்த அல்லது மதித்தவர்கள் பற்றிக் கூறியதை அல்லது எழுதியதை பாரதியின் பார்வையில் என மு.ஸ்ரீனிவாசன் தொகுத்துத் தந்திருக்கிறார். இந்த நூலில் உள்ள சில படங்கள் அபூர்வமானவை. இன்று எல்லாம் விரல் நுனியில் இருக்கிறது எனலாம். ஆனால் எதுவும் சந்தர்ப்ப சூழ்நிலை விளக்கப்படவில்லை என்றால் பயனற்றுப் போய்விடும். ஸ்ரீனிவாசன் இந்தியாவையும் உலகத்தையும் பலமுறை பயணம் செய்து, அவர் சொல்வதனைத்தையும் கண்ணால் கண்டவர். இந்த நூல் பல உன்னத மனிதர்களையும் பல வரலாற்று நிகழ்ச்சிகளையும் நம் கவனத்துக்குக் கொண்டு வருகிறது. இந்த நூல் ஸ்ரீனிவாசன் படைத்த எண்ணற்ற நூல்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது. நன்றி: குங்குமம், 1/9/2014.
—-
மகாத்மா பாராட்டிய மாமனிதர் ஜீவா, ச. குமார், அறிவுப் பதிப்பகம், சென்னை, விலை 15ரூ.
கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தத்தின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் 10 தலைப்புகளில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. ஜீவாவைத் தேடிய மனித நேயக் காமராஜர் தலைப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. தினத்தந்தி