பெண்களுக்கு
பெண்களுக்கு, தொகுப்பு பொம்மை சாரதி, ஸ்ரீமாருதி பதிப்பகம், சென்னை 14, விலை 90ரூ.
பெண்கள் கருவுறுதல், பேறுகாலம், பிறக்கப் போகும் குந்தையின் பாலினம் இவற்றைப் பற்றியெல்லாம் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. வெளியாகிக் கொண்டும் இருக்கின்றன. வித்தியாசமான முறையில் இந்த நூலை எழுதியிருக்கிறார் பத்திரிகையாளர் ‘பொம்மை’ சாரதி. வாழ்க்கை நெறி பற்றிய ஆன்றோர்களின் அறிவுரைகள் உட்பட அவசியமான பல தகவல்களையும் தொகுத்துத் தந்திருக்கிறார். சுகாதார, மருத்துவக் குறிப்புகள், உடற்பயிற்சி முறைகள், சட்டப் பிரச்னைகள் – எல்லாவற்றுக்கும் நூலாசிரியர் இடமளித்திருக்கிறார். ‘பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் எங்கும் எப்போதும் படிக்கலாம்’ என்னும் அறிவிப்பே தர முத்திரையாக உள்ளது. நன்றி – கல்கி, 4 நவம்பர் 2012.