பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்

பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும், தொகுப்பாசிரியர்-ஸ்ரீ ரா. கணபதி, சனாதனா பப்ளிகேஷன்ஸ், 142, முதல் மாடி, கிரீன்வேஸ் ரோடு, ஆர்.ஏ.புரம், சென்னை 28, விலை 50ரூ.

20-21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான்களில் குறிப்பிடத்தக்கவர் காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸ்வாமிகள், மக்கள் தங்கள் வாழ்க்கையை ஆன்மீகத்தோடும், உயர்ந்த பண்பாடு, கலாசாரத்தோடும் செம்மையாக வாழ, அவர் நாடெங்கிலும் நடந்தே சென்று மக்களுக்கு நல்லுபதேசங்களை மொழிந்தார். அந்தக் கருத்துக்களின் தொகுப்பே தெய்வத்தின் குரல் மொழிந்தார். அந்தக் கருத்துக்களின் தொகுப்பே தெய்வத்தின் குரல் என்ற நூலாக பிரசித்திப் பெற்று விளங்குகின்றது. அதில் பெண்களைப் பற்றியும், பெண்கள் பேண வேண்டிய ஒழுங்குகள் பற்றியும் மகா பெரியவர் கூறிய கருத்துக்கள் இடம் பெறவில்லை. அவற்றையெல்லாம் இந்நூலாசிரியர் தனியாகத் தொகுத்து அதை மட்டும் நூலாக வெளியிட்டுள்ளார். இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் பல்வேறு பிரச்னைகளும், அமைதியின்மையும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது. இதன் விளைவாக சில குடும்பங்கள் சீர் கெட்டுவிடுகின்றன. இவற்றுக்கு ஸ்த்ரீ தர்மம் பற்றி மகா பெரியவர் பல்வேறு சமயங்களில் கூறிய பல கருத்துக்கள் மூலம் விடை காணலாம். எனக்கு சொந்த அபிப்பிராயங்கள் என்று எதுவுமில்லை. சாஸ்திரங்களில் கூறப்படுவது என்னவோ அதைச் சொல்ல மட்டும்தான் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறும் மகாபெரியவரின் இக்கருத்துக்களை அடியொற்றி நடக்க, இன்றைய தலைமுறைக்கு சிறிது கடினம்தான் என்றாலும், அதுதான் பிரச்னைகளுக்குத் தீர்வு என்று நம்புகிறவர்களுக்கு இந்நூல் நல்ல வழிகாட்டி. -பரக்கத். நன்றி: துக்ளக், 11/6/2013.  

—-

 

அருணாசல மஹாத்மியம்(அருணை மலையின் பெருமையும் புகழும்), தொகுப்பாளர்-முனைவர் எஸ். ராஜ்மோஹன், வேத கல்பதரு ட்ரஸ்ட், விலை 80ரூ.

ஸ்ரீ ஸ்கந்த புராணத்தின் ஒரு பகுதியான அருணாசல மாஹாத்மியம் 81,000 கிரந்தங்கள் கொண்டதாம். பதின்மூன்று அத்தியாயங்களில் வெளியாகியுள்ளது பொக்கிஷம் போன்ற இந்த நூல். நிறையப் படங்களோடு வெளியாகியுள்ள இந்த நூலின் சிறப்பு அம்சம் பகவான் ரமணரின் கைவண்ணத்திலேயே உருவான அருணை மலையின் அழகான தோற்றம்தான். நினைத்தாலே முக்தி தரும் இந்த அருணைமலையின் தெய்விகத் தோற்றத்தை இப்படி எத்தனைபேர் சித்திரமாக்கி முக்தி பெற்றிருப்பார்களோ தெரியாது. ஆனால் பகவானின் கைவண்ண நேர்த்தியில் பவித்திரமும் உண்டே. சமஸ்கிருத மூலவடிவத்தையும் தந்து அதற்குப் பேராசிரியர்கள் என். நீலபாலசர்மாவும், எஸ். உமாபதியும் எழுதியுள்ள தமிழாக்கத்தையும் வழங்கியிருக்கிறார்கள். அஸ்வமேத ஸஹஸ்ராணி வாஜபேயா யுதானி ச ஸிதூத்யந்தி சர்வதீர்த்தானி ப்ரதஷிண பதே பதே என்ற சுலோகத்துக்கு ஆயிரக்கணக்கான அச்வமேதம், பல்லாயிரக்கணக்கான வாஜபேயங்கள், ஸர்வ தீர்த்தங்களும் தரும் பயன்கள் எல்லாம் வலம் வரும் ஒவ்வொரு அடியிலும் கிடைக்கின்றன என்று சுகமாய் இந்நூலில் பொருளைத் தெரிந்துகொண்டு படிக்கும்போது கிடைக்கிற ஆனந்தமே அலாதியானதுதான். கொள்ளை மலிவு என்பார்களே, அவ்வளவு மலிவு இந்த அரிய நூலின் விலை. சுப்ர. பாலன். நன்றி: கல்கி, 3/6/2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *