போதை ராஜ்யம்
போதை ராஜ்யம், ரா.கி.ரங்கராஜன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ.
பிரபல பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய ரா.கி. ரங்கராஜன் நக்கீரன் இதழில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய தொடர்கதையின் புத்தக வடிவம். கொலம்பியாவின் போதைப் பொருள் கடத்தும் மாபியா கும்பல் பற்றிய இந்தக் கதையில் விறுவிறுப்பு, திகில், திருப்பங்கள் எல்லாம் உண்டு.
—-
இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும், நலவாழ்வு எல்லோருக்கும் அடையாளம், திருச்சி 621310, விலை 40ரூ.
சர்வதேச அளவில் மருத்துவத் துறையில் புகழ்பெற்ற மேயோ கிளினிக்கின், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான கையேடு தமிழில் வந்திருக்கிறது. இன்றைய மனஅழுத்தம் மிக்க வாழ்வில் இரத்த அழுத்தத்தை எளிதாக புரிய வைத்து, அதை தவிர்ப்பதற்கான வழிகளை முன்வைக்கிறது.
—-
புதிய ஈரானிய சினிமா தொகுப்பு, சஃபி கயல்கவின், திருவான்மியூர், சென்னை 41, விலை 160ரூ.
நகூன சினிமா ரசிகர்களை வசீகரித்திருக்கும் ஈரானிய சினிமா பற்றிய வரலாற்றையும் புதிய புரிதலையும் தருகிறது இந்த கட்டுரைத் தொகுப்பு. முன்னோடி இயக்குனர்களின் பேட்டிகள் கவர்கின்றன. ஆப்கானிஸ்தான் பற்றிய கட்டுரை முக்கியமானது. அந்த நாடு பற்றிய பல மாயைகளை உடைக்கக்கூடியது. நன்றி: இந்தியா டுடே, 21/8/2013.