மக்கள் கண்ட மகான்கள்
மக்கள் கண்ட மகான்கள், எம்.எஸ். பிந்துமாதவன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ.
(பக்தி வளர்த்த 31 ஹரிபக்த ரத்னங்கள்) இந்திய தேசத்தில் தோன்றிய மகான்கள் அனேகர். அந்த அருளாளர்களின் சதித்ரித்தை அறிவது, நம்மை நல்வழிப்படுத்தி, அறத்திலும், ஆன்மிக மேம்பாட்டிலும் நிச்சயம் உயர்த்தும். பக்தியால் மேம்பட்டு, பரமன் அருளைப் பெற்று, அற்புதங்கள் பல நிகழ்த்திய பத்ராசல ராமதாசர், கபீர்தாசர், கோராக் கும்பர், சோகாமேளர், கனகதாசர், பக்த மீராபாய், ராகவேந்திரர், புரந்தரதாசர் போன்ற 31 ஹரி பக்த சிரோன்மணிகளின் வரலாற்றை எடுத்துரைக்கிறது இந்த நூல். இவர்களில் 11 பேர் பெண்கள். இந்த நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளோரில், ராகவேந்திரர் தவிர் மற்றவர்கள் அனைவரும், ஆந்திரா, கர்நாடாகா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த பக்த சிகாமணிகள். நீதி, நேர்மை, பக்தி, ஒழுக்கம், தியாகம் போன்ற உயரிய குண நலன்களைப் பிஞ்சு மனங்களில் பதியச் செய்ய உதவும் அருமையான நூல். -பவானி மைந்தன். நன்றி: தினமலர், 21/6/2015.
—-
தகவல் வழிகாட்டி, விஜய் கிருஷ்ணா, ராஜாத்தி பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.
அரசு நிலங்களைப் பற்றிய தகவல்கள், அரசு தரும் உதவிகள், நிலமாற்றம், நில உரிமை மாற்றம் குறித்த தகவல்கள் ஆகியவற்றை தெளிவாக விளக்கும் வழிகாட்டி நூல். நன்றி: தினத்தந்தி, 17/6/2015.