மணப்பேறும் மகப்பேறும்
மணப்பேறும் மகப்பேறும், நாகமணி மருத்துவமனை, சென்னை, விலை 1000ரூ.
1217 பக்கங்கள் கொண்ட பிரமாண்டமான மருத்துவ நூல் இது. நூலாசிரியர் டாக்டர் ஞானசவுந்தரி மகப்பேறு மருத்துவத்தில் நீண்ட அனுபவம் உடையவர் என்பதுடன் 30 ஆயிரம் பெண்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை படைத்தவர். திருமணத்தின்போதும், கர்பிணியாக இருக்கும்போதும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை தெளிவாகச் சொல்கிறார். சுகப்பிரசவத்துக்கான யோசனைகளைக் கூறுகிறார். நுட்பமான விஷயங்களை படத்துடன் விளக்குகிறார். இது மருத்துவத்துறையில் முக்கியமான புத்தகம். புத்தகத்தின் வடிவமைப்பு, மேல்நாட்டுப் புத்தகங்களுக்கு சவால் விடும் விதத்தில் சர்வதேசத் தரத்துடன் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/10/2014.
—-
இலக்கிய வீதி இனியவன், கலைஞன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
இலக்கிய வளர்ச்சிக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர் இலக்கிய வீதி இனியவன். அவரே ஒரு எழுத்தாளராக இருந்தபோதிலும், பிற எழுத்தாளர்களைப் பாராட்டி விழாக்கள் நடத்தியவர். இலக்கிய விழாக்கள் நடத்தி சாதனை படைத்தவர். அவர் வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார் ராணி மைந்தன். நன்றி: தினத்தந்தி, 22/10/2014.