மண்ணில் உலவிய மகான்கள்
மண்ணில் உலவிய மகான்கள், க. துரியானந்தம், எல்.கே.எம். பப்ளிகேஷன், 33/4 (15/4) ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 120, விலை 50ரூ.
ஸ்ரீ பாடகச் சேரிசுவாமிகைள், போதேந்திர சுவாமிகள், ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள், மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், நெரூர் மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர், குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகள், ஸ்ரீ ரெட்டியப்பட்டி சுவாமிகள் இந்த ஏழு மகான்களின் வரலாற்றை சுருக்கமாக தந்திருக்கிறார் ஆசிரியர். எளிமையான, ஆனால் கவர்ச்சிகரமான நடை, புத்தகத்தை விறுவிறுவென்று வாசிக்கத் தூண்டுகிறது.
—-
அபிராமி அந்தாதி (பாடல் 76 முதல் 100 வரை), அபிராமிதாசன், கே. வெங்கட சுப்பிரமணியன், கோமதி அச்சகம், மதுரை, பக். 492, விலை 200ரூ.
அபிராமி அந்தாதிப் பாடல்களும், அதற்கான விரிவான பொருளும் இதில் காணலாம். இந்த நூலுக்கு முன்னுரையாக பல பிரமுகர்கள் எழுதியபோதும், சிங்கம்பட்டி குறுநில மன்னர் முருகதாஸ் தீர்த்தபதி தன் உரையில் லோகமாதா அபிராமியை வழிபட்டால் நலம் பெறலாம் என்ற கருத்தே இந்த நூலின் பெருமையை விளக்கும். நன்றி: தினமலர், 11/3/2012.
—-
புரட்சிப் பெண்மணி, தென்றல் நிலையம், 12பி, மேலசந்நிதி, சிதம்பரம்1, விலை 100ரூ.
எம்.ஏ.எம்.பில், பி.எச்.டி, முதலான பட்டங்களைப் பெற்று ஆசிரியையாகப் பணியாற்றியவர். திருவள்ளுவருக்கு சிலை எடுத்தவர். கரக ஆட்டம் மற்றும் பல நடனங்களை கற்று, திருக்குறளை பரப்புவதற்காக கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் முனைவர் கோ.ப.செல்லம்மாள். பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார் கவிஞர் கானதாசன். நன்றி: தினத்தந்தி, 30/10/2013