மனச்சிறகுகள்

மனச்சிறகுகள், கவிஞர் மருதம்கோமகன், கோமகன் பதிப்பகம், 479ஏ, 8வது தெரு, பாரதிநகர் தெற்கு, கும்பகோணம், விலை 90ரூ.

கண்ணில் கண்ட காட்சிகளை காதில்பட்ட செய்திகளை கவிதையாய், புகைப்படத்துடன் சமுதாய சிந்தனை கருத்துடன் சொல்லப்பட்டுள்ளது. 104 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி 10/4/13.  

—-

 

சுற்றுச்சூழல் சிந்தனைகள், அரிமா. ஜே, ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், 19, ராஜசேகரன் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-8.html

என்னென்ன காரணங்களால் நமது சுற்றுச்சூழல் பாதிக்கிறது என்று 50 கட்டுரைகள் மூலமாக விவரிக்கப்பட்டுள்ளன. நம்மை சுற்றி மட்டும் அல்லாது உலகை சுற்றியும் எப்படி பாதிக்கிறது என்ற பல கட்டுரைகள் உள்ளன. பாதிப்படையும் சுற்றுச்சூழல்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

—-

 

கபிலர், கா. அரங்கசாமி, சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 50ரூ.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கப் புலவர்களால் போற்றப்பெற்றவர் கபிலர். திருகோவிலூர் பாடல் கல்வெட்டு இவர் பெருமையை பறைசாற்றுகிறது. கபிலர் குறித்து பல தமிழார்வலர்கள் புத்தகங்கள் எழுதியுள்ளனர். ஆனால் கபிலரின் வரலாற்றையும், கபிலரின் தமிழியல், ஆளுமைத்திறன், இலக்கியக் கோட்பாடுகள் குறித்து மாறுபட்ட கோணத்தில் படம்பிடித்து காட்டுகிறார் கல்வெட்டியல் புலமை பெற்ற நூலாசிரியர் கா. அரங்கசாமி. நன்றி: தினத்தந்தி 10/4/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *