மன்மதன் வந்தானடி
மன்மதன் வந்தானடி, பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், விலை 130ரூ.
ஒவ்வொரு பெண்களும் தனக்கு வரப்போகிற கணவன் பற்றி இனிய கனவு காண்கிறார்கள். அது நனவாகும்போது பிரச்சினை எதுவும் இல்லை. நேர்மாறாக அமையும்போது ஏமாற்றம், விரக்தி, குழப்பம் எல்லாம் சூழ்ந்து கொள்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதை எப்படி எதிர்கொள்வது என்பதை இந்தக் கதையின் நாயகி வைதேகி எடுக்கும் முடிவே கதையின் மையக்கருத்து. அதுவே தாம்பத்தியத்தில் உண்மையான வெற்றி என்பது கதை நாயகி, நவயுக பெண்களுக்கு விடுக்கும் செய்தியாகும். வசீகர நடையால் வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறார். நாவல் ஆசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர். இந்த நூலில் விலை 130ரூ. இதே எழுத்தாளர் எழுதிய 3 நாவல்கள் வெளிவந்துள்ளன. அது மட்டும் ரகசியம் விலை 115ரூ. இந்திய நேரம் 2 பி.எம். விலை 125ரூ. மேகப் புன்னகை விலை 125ரூ. நன்றி: தினத்தந்தி, 25/11/2015.
—-
கொங்குநாட்டு வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 120ரூ.
கொங்குநாடு ஆதிகாலம் முதல் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அதனால் தமிழ்நாட்டுக்குச் சரித்திரத்தில் கொங்கு நாடும் முக்கிய இடம் பெற்றுள்ளது. சங்க காலத்து கொங்கு நாட்டு வரலாற்றை எழுதுவதற்கு என்னென்ன சாதனங்களும், கருவிகளும், சான்றுகளும் கிடைத்திருக்கின்றனவோ அவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு இந்த கொங்கு நாட்டு பழைய வரலாறினை எழுதியிருக்கிறார் நூலாசிரியர் மயிலை சீனி.வேங்கடசாமி. நன்றி: தினத்தந்தி, 25/11/2015.