மறுபிறப்பு பற்றிய ஆச்சரியமான தகவல்கள்
மறுபிறப்பு பற்றிய ஆச்சரியமான தகவல்கள், எஸ். குருபாதம், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 250ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-336-2.html எந்தவொரு மதத்தையும் சாராதவன் என்று தன்னைப் பற்றி கூறும் இந்நூலாசிரியர், மதம் சார்ந்த நம்பிக்கையான மறுபிறப்பு பற்றி வெளியான பல்வேறு செய்திகளையும், ஆய்வுகளையும் விருப்பு வெறுப்பு இன்றி இந்நூலில் தொகுத்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மெய்யியல் துறையின் பாடநூல்களில் ஒன்றாகவும் இந்நூல் உள்ளது. ஆன்மா அழிவற்றது. உடல்தான் அழியக்கூடியது என்பது அனைத்து மதங்களும் ஏற்றுக் கொண்டிருக்கும் ஒரு தத்துவம். இதில், முக்தி அடையும் ஆன்மாவைத் தவிர மற்றவை மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கின்றன என்பது இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற ஓரிரு மதங்களைத் தவிர மற்ற பெரும்பாலான மதங்களின் நம்பிக்கையாகும். உலகில் நடக்கும் சில அமானுஸ்யமான நிகழ்வுகளுக்கு, இந்த மறுபிறவி தத்துவம் ஒரு வடிகாலாகவும் அமைந்து விடுவதும் இதற்குக் காரணமாகும். அது மாதிரியான விஷயங்களையே ஆசிரியர் இந்நூலில் தொகுத்துள்ளார். குறிப்பாக உளவியல் சாரா அறிஞர்கள், கிரேக்க சிந்தனையாளர்கள், மேலை மற்றும் கீழை நாட்டு மெய்யில் அறிஞர்கள், ஹிப்னாடிஸ் மருத்தவர்கள், மதவாதிகள், இந்திய சிந்தனையாளர்கள், பிசித்திப் பெற்ற பிரமுகர்கள் என்று பலரது கருத்துக்களையும், அனுபவங்களையும் இந்நூலில் தொகுத்துள்ளார். 375 பக்கங்களுக்கு மேல் விரியும் இந்நூல் 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எல்லாமே படிக்க விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதோடு, மரணத்திற்குப் பின் என்ன என்ற தேடலையும் நம்முள் உருவாக்குகின்றது. நன்றி: துக்ளக், 3/10/2014.