மறைக்கப்பட்ட இந்தியா
மறைக்கப்பட்ட இந்தியா, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 275ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-171-8.html
வரலாற்றை அறிந்து கொள்வது முடிவில்லாத தேடல். அது உள்ளங்கையில் அள்ளிட கடலைப் போலத்தான் இருக்கும். ஆனாலும் வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும் மனிதாபிமானத்தோடும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. எத்தனையோ பல நூற்றாண்டுச் செய்திகள் ஒரு சில வரிகளுள் உள்ளடக்கமாகியிருக்கிறது. கொஞ்சமும் கூட்டியோ, குறைத்தோ கற்பனை கலந்து எழுதாமல், உண்மையான வரலாற்று நிகழ்வுகளுக்குள் வாழ்ந்தவர்களைப் போல் நம்மை ஊடுருவி வரச்செய்திருக்கிறது எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் இயல்பான எழுத்துநடை. மேலும் விவரங்கள் அறிய, ஒவ்வொரு அத்தியாயத்திலும் கட்டுரை சம்பந்தமான நூல்களைப் படிக்க வாருங்கள் வாசிப்போம் என்ற நூல்களின் பெயரை குறிப்பிட்டிருப்பது சிறப்பு. அது வரலாற்றை மேலும் தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு உதவும். நன்றி: தினத்தந்தி, 30/10/2013.
—-
இங்கிலாந்து மலர் மருந்துகள் (பாகம் 1), டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி, ராமன் ஹவுஸ், 21, குப்பையா தெரு,மேற்கு மாம்பலம், சென்னை 33, பக்.196, விலை 75ரூ.
லண்டனை சேர்நத் அலோபதி டாக்டர் கண்டுபிடித்த மலர் மருந்துகளையும் அவற்றின் பயன்களையும் எழுதி வெளியிட்டு இருக்கிறார் ஆசிரியர். நாம் கற்ற விஷயங்களை சரியாக தெரிந்துகொள்ளும் வழியை, இங்கிலாந்து காட்டில் ஒரே ஒரு இடத்தில்முப்பத்தெட்டு காட்டு மலர்கள் மூலமாக இறைவன் கொடுத்துள்ளார் என்கிறார் ஆசிரியர். இவை மருத்துவ அறிவு இல்லாத பாமர மக்கள் உபயோகத்திற்குதான் என புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. கெட்ட பழக்கத்தை கைவிட, இந்த மருத்துவ முறையில் வால்நட் என்ற மருந்து உள்ளது. இந்தியாவில் இது கிடைக்கிறது. இப்படி மலர் மருந்துகள் பற்றி விளக்கும் புத்தகம் இது. மலர் மருந்துகளால் பயன் அடைந்தவர்களின் அனுபவங்களும் உள்ளன. நன்றி: தினமலர், 8/4/2012.
