மலரும் நினைவுகளில் மக்கள் தலைவர்
மலரும் நினைவுகளில் மக்கள் தலைவர், கே. இளந்தீபன், கவிதா வெளியீடு, 8/55, மேற்கு சாலைத் தெரு, சுந்தரப் பெருமாள் கோவில், கும்பகோணம் 614208, பக். 104, விலை 100ரூ.
மக்கள் தலைவர் மூப்பனார் பற்றிய நினைவுகளின் தொகுப்பு நூல். மூப்பனார் மறைந்ததும் கலைஞர், ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட தமிழக தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள், வாலி, வைரமுத்து உள்ளிட்ட கவிஞர்கள் இன்னும் கட்சி பேதமின்றி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி அன்பர்களிடமும் மூப்பனார் பற்றிய மேலான நினைவுகளை நூல் முழுவதும் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். தமிழ் படைப்புலகில் இது ஒரு புது முயற்சி, மூப்பனார் பற்றிய நினைவுகள், சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்ள நல்ல ஆதாரப்பூர்வமான ஆவணம் இந்நூல்.
—–
இஸ்லாமும் இங்கிதமும், மௌலவி நூஹ் மஹ்ழரி, இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 176, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-414-9.html
வீட்டில் பெற்றோருடன், மனைவியுடன் எப்படி இங்கிதத்துடன் நடந்துகொள்ள வேண்டும், வீட்டிற்கு வெளியே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை திருக்குர்ஆனும் திருநபி (ஸல்) அவர்களும் கற்றுத் தந்த பண்பாட்டை விளக்கும் நூல். எளிமையான நடையில் தூய்மையான வார்த்தைகளில், பிறர் மனம் புண்படாது, அதே சமயம் மாற்றுக் கருத்துடையோரும் ஏற்றுக்கொள்ளும் வித்தில் நூலாசிரியர் வெளியிட்டுள்ள கருத்துக்களிலேயே இங்கிதம் வெளிப்படுகிறது. இஸ்லாம் சகோதரர்களுக்கு மட்டுமல்ல, எம்மதத்தினருக்கும் ஏற்ற உயர்ந்த கருத்துக்களை நபிமொழிச் சுரங்கத்தில் இருந்து ஆசிரியர் அள்ளி அள்ளித் தந்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி; குமுதம், 26/12/12.
