மார்க்சிய சிந்தனை சுருக்கம்

மார்க்சிய சிந்தனை சுருக்கம் (மூலதனம் பற்றிய எளிய விளக்கம்), தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 184, விலை 135ரூ.

சமூக விஞ்ஞானி கார்ல் மார்க்ஸி எழுதிய மூலதனம் என்ற நூலின் சாராம்சத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல். பொருளியல் அறிவுடையவர்கள் மட்டுமே மார்க்ஸின் மூலதனத்தைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி, பாமர மனிதர்களும் மூலதனத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பெரிய முயற்சியின் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நூலை மார்க்சிய மெஞ்ஞானத்தின் சாரம் என்றும் சிறிய நூல் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் மார்க்சியச் சிந்தனை என்ற பெருங்கடலை இந்தச் சிறிய நூலுக்குள் நூலாசிரியர் அடைத்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். தற்போதைய காலகட்டத்திற்கேற்ப கார்ல்மார்க்ஸின் கருத்துகளை விளக்கியிருபபது பிரமிக்க வைக்கிறது. மார்க்சிய மெஞ்ஞானத்தை விளக்க ஆங்காங்கே பொருத்தமான திருக்குறளை எடுத்துக்காட்டியுள்ளது நூலின் கூடுதல் சிறப்பு. இந்த நூலைப் படித்து முடிக்கையில் கார்ல் மார்க்ஸின் மூலதனத்தைப் படித்து முடித்த திருப்தி கிடைக்கிறது. சிறிய நூலாயினும் சிறந்த நூல். நன்றி: தினமணி, 12/10/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *