மாற்றம்
மாற்றம், மோ – யான், தமிழில் பயணி, காலச்சுவடு பதிப்பகம், பக். 87, விலை 80ரூ.
மாற்றம் என்ற இந்தப் படைப்பு, நாவல் வடிவில் எழுதப்பட்ட சுயசரிதை, நாயகனின் பள்ளிப்பருவ வாழ்க்கையில் துவங்குகிறது கதை. நாயகன் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் வாழ்க்கையின் போக்கில் பயணித்து, எங்கெங்கோ அலைந்து, இலக்கியவாதியாகி, அவனுடைய கதை சினிமாவாக எடுக்கப்பட்டு, பிரபலமாகி கடைசி அத்தியாயத்தில் அதே கிராமத்துக்கு வந்து சேர்வதுடன், கதை முடிகிறது. நூலின் இடையிடையே பழமொழிகள், தத்துவங்கள் போகிறபோக்கில் இரைந்து கிடக்கின்றன. சீன வழக்குமொழி நடையில் எழுதப்பட்டிருப்பது சுவையாக இருக்கிறது. ‘மோ யான்’ என்னும் புனைப்பெயரில் எழுதும் குயான் மோயே, 2012ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இந்த நூல், பயணி என்னும் புனைப்பெயரில் எழுதும் ஸ்ரீதரன் மதுசூதனனின் தமிழாக்கத்தில், சீனத்திலிருந்து நேரடியாக தமிழுக்கு வந்துள்ளது. அதனாலேயே நூல் அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. சரளமான நடையில், சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் ஸ்ரீதரன். -ஷாஜஹான். நன்றி: தினமலர், 13/3/2016.