மாலன் சிறுகதைகள்
மாலன் சிறுகதைகள், மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 416, விலை 200ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-047-9.html
ஆசிரியர் மாலன் பல்வேறு பத்திரிகைகளில் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய, 55 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன. இலக்கியத் தரம் வாய்ந்த இச்சிறுகதைகள் பற்றி, தமிழன் தமிழ் இளைஞர்களின் இன்றைய நிலை குறித்து மாலன் மிக அக்கறையோடு தாயுள்ளத்தோடு யோசித்துள்ளார் என, கூறியுள்ளார் பிரபஞ்சன். ஆரோக்கியமான விவாதங்களை நம்முன் வைக்கும் சிறுகதை தொகுதி நூல். -கவுதம நீலாம்பரன்.
—-
சரித்திரச் சாலையின் சந்திப்புகள், தமிழ் மாமணி ஹாஜி, எஸ்.எம். கனிசிஷ்தி, முஸ்லிம் குரல் கம்ப்யூட்டர் பிரின்ட், சென்னை 5, பக். 200, விலை 100ரூ.
முஸ்லிம் குரல் ஆசிரியரான இந்நூலாசிரியர் ஆன்மிக, அரசியல் தளங்களில் தடம் பதித்து சமுதாயப்பணியில் ஈடுபட்டிருப்பவர். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாய், பொது வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களைப் பல நாளிதழ்கள், மாத இதழ்கள், சங்கங்களின் மலர்கள் ஆகியவற்றில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அறம் பாடிய கவிஞர்கள் என்ற தலைப்பில் உள்ள கட்டுரை பிரமிப்பை ஊட்ட வல்லது. -சிவா.
—-
ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு, பி. கோதண்டராமன், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 14, பக். 352, விலை 160ரூ.
ஸ்ரீ அரவிந்த ஆசிரம சாதகரான பி. கோதண்டராமன் சிறந்த எழுத்தாளர். 1964ஆம் ஆண்டு வெளியான இந்த நூலின் இரண்டாம் பதிப்பு இப்போது வெளிவந்திருக்கிறது. மிகச் சிறந்த யோகியாகவும், அதிமனம் பேரொளியாகவும் அறியப்படும் ஸ்ரீ அரசிந்தரின் அரசியல் வாழ்க்கை பற்றியே இந்நூலில் அதிகம் காணப்படுகிறது. -ஜனகன். நன்றி; தினமலர், 6/1/13.