காவிரி பிரச்சனையின் வேர்கள்
காவிரி பிரச்சனையின் வேர்கள், வே. ஜீவகுமார், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 48, விலை 30ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-4.html
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை அரசிதழில் வெளியிட்டு விட்டார்கள். இனி தமிழகத்திற்கு காவிரி நீர் வருவதில் பிரச்னை இருக்காது என்றே அத்தனை கோடி தமிழர்களும் நம்பியிருந்தனர். ஆனால் கடிகாரம் பின்னோக்கி சுற்ற ஆரம்பித்துவிட்டது. மாநில எல்லைக் கோடுகள் நதிகளுக்குக் கிடையாது என்கிற நிலையில், ஒரு நதி பாயும் அத்தனை நிலப்பரப்புக்கும் அந்த நதி சொந்தம்தானே. பல நூற்றாண்டுகளாக காவிரி நீரை உண்டு வாழ்ந்த மக்கள், இந்த நூற்றாண்டில் மட்டும் தற்கொலை செய்து மடியும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்? என்பதை விளக்குவதுடன் காவிரிப் பிரச்னையில் ஊடாடும் அரசியலையும் இந்நூல் ஆராய்கிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம் 19/6/13.
—-
இந்தத் தொகுப்பின் பெயர் இதனுள் எங்கோ இருக்கிறது, புதுவைப்பிரபா, கல்பனா பதிப்பகம், 2, முத்துவாழி அம்மன் கோவில் தெரு, பாக்கமுடையான் பட்டு, புதுச்சேரி 8, பக். 112, விலை 100ரூ.
உழவா? எழவா?வில் நம் விவசாயத்தின் உயிர்நாடி அறுந்துபோன காரணத்தை ஆசிரியர் விளக்குவதில் இருந்தே இந்த மண்ணின்மேல் அவருக்கு இருக்கும் பற்று புரிபடுகிறது. கவிதை வரிகளால், நாட்டில் நடக்கும் சமகால அத்தனை ஏச்சு, பேச்சு, அடக்குமுறை, அநியாயம், அதிகாரம், தீவிரவாதம் என்று ஒன்றுவிடாமல் அலசுகிறார். எளிய தமிழில் காதலாகட்டும், நட்பாகட்டும், கல்வியாகட்டும், சாதியாகட்டும், நம்புங்கள் நம்மால் நல்லதாய் மாற்றிக்காட்ட முடியும் என்று சத்தியம் செய்கிறார். அதற்கு மக்களை ஓரணியில் திரளச் சொல்கிறார் எல்லாம் கவிதை மனம் கொண்டே. நன்றி: குமுதம் 19/6/13.
—-
வானம் தொடு தூரம்தான், ஆர்த்தி சி. ராஜரத்னம், பிருந்தா ஜயராமன், கல்கி பதிப்பகம், கல்கி பில்டிங், 47np ஜவஹர்லால் நேரு சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, பக். 248, விலை 90ரூ.
குழந்தை சிறந்து விளங்காவிட்டால் பெற்றோர் சரியில்லை என்று சொல்லும் உலகம் இது. அதனால் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம் என்றே பெற்றோர் நினைக்கின்றனர் அவர்களுடன் எப்படி பழகுவது எப்படி உறவை மேம்படுத்துவது, சிறந்தவர்களாக வளர்க்கும் முறைகள், பிரச்னைகளைத் தீர்க்கும் முறைகள், குழந்தைகள் மன உலகம் எப்படி இருக்கும். அதற்குள் நாம் பயணிப்பது எப்படி? என்று பெற்றோரின் பல கேள்விகளுக்கு பதிலும் உதாரணங்களும் நிறைந்த ஒரு சிறந்த வழிகாட்டி நூல். நன்றி: குமுதம் 19/6/13.