முச்சந்தி இலக்கியம்
முச்சந்தி இலக்கியம், ஆ. இரா. வேங்கடாசலபதி, காலச்சுவடு, விலை 140ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-058-1.html
கடந்த 19ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, 20ம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி வரையிலான, தமிழ் சமூகத்தின், அரசு அதிகாரத்திற்கு எதிராக, கலகத்ததை ஏற்படுத்திய வெகுமக்களின் வரலாற்றை, முச்சந்தி இலக்கியம் எனக் கூறப்பட்ட, குஜிலி இலக்கியங்கள், தன்னுள் கொண்டுள்ளன. அவை, மலிவான அச்சில் பதிப்பிக்கப்பட்டு, காலணா, அரையணாவிற்கு மக்கள் கூடும் இடங்களில் விற்கப்பட்டன. இந்த இலக்கியத்தை அறிமுகம் செய்வதோடு, அதை பற்றிய தெளிவுகளை நமக்கு தரும்படி இந்த நூல் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. முதல் பகுதியில் உள்ள ஒன்பது கட்டுரைகள், குஜிலி இலக்கியத்தை எழுதியவர்கள், அவற்றை வெளியிட்டவர்கள், அவற்றின் பயனாளிகள், எதிராளிகள் என அதன் சமூக இயங்குதள்ம் குறித்து ஆராய்ந்து பேசுகிறது. இரண்டாம் பகுதியில் உள்ள பல வகையான, 28 குஜிலி பாடல்கள், தன் சமகால சமூக நிகழ்வுகளான, மெட்ராஸ் ரயில் கலகம், சிலோன் கலகம், ராயபுரம் ரயில்வே ஸ்டேஷன், குதிரைப் பந்தயம், கள்ளுக்கடை, மோசடி வியாபாரம், நவரத்தின ஒப்பாரி, கள்ளப்புருசன் ஆகையால் பிள்ளையை கொன்ற கனாகாம்பாள், மரண கீதம், காந்தியின் கதர், தேசபக்தி கீதம், சத்தியாகிரகபாட்டு, விநோதச் சிந்து, புயல் கும்மி, என்பதோடு சமயம், வழிபாடு, மருத்துவம், அறம் என, சமூகத்தின் எந்தப் பகுதியையும் விடாமல் சகல துறைகளைப் பற்றியும் பாடியுள்ளதை காட்டுகின்றன. இந்த நூல் சென்னை தரமணியில் இயங்கும், உலகத் தமிழாய்ச்சி நிறுவனத்தின் நூலகத்தில் வாசிக்க கிடைக்கிறது. நன்றி: தினமலர், 2/5/2014.
—-
விழி மூடிய நினைவுகள், பொற்கொடி, மெட்ராஸ் பழனியப்பா பிரதர்ஸ், விலை ரூ. 205.
பெண்களின் மனம் கவர்ந்த எழுத்தாளர் பொற்கொடி. இவர் சிறுகதை போட்டிகளில் பங்கேற்று, பல வெற்றிகளைப் பெற்றவர். வார இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளியாகி உள்ளன. தினமலர் வாரமலர் டி.வி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றதும், இவரது சிறப்பாகும். குடும்பத்தின் நெருக்கங்களை விளக்கும் இந்தப் படைப்பு அனைவரையும் கவரும். நன்றி: தினமலர், 2/5/2014.