முல்லை பெரியாறு அணை பிறந்த கதை
முல்லை பெரியாறு அணை பிறந்த கதை, விகடன் பிரசுரம், சென்னை, விலை 115ரூ.
தமிழ்நாட்டுக்கும், கேரளத்துக்கும் பெரிய பிரச்சினையாக இருப்பது முல்லை பெரியாறு அணை. இந்த அணையைக் கட்டியவர் பென்னிகுயிக் என்ற வெள்ளைக்காரர். இந்த அணையைப் பற்றி ஒரு கதையே இருக்கிறது. அணை கட்டப்படும்போது, வெள்ளப்பெருக்கால் அணையின் ஒரு பகுதி அழிந்துபோயிற்று. இதற்கு பென்னி குயிக்தான் காரணம் என்று வெள்ளை அரசு பழிபோட்டதுடன், மேற்கொண்டு அணையைக் கட்டி முடிக்க பணம் தரவும் மறுத்துவிட்டது. இதனால் பென்னி குயிக் இங்கிலாந்து நாட்டுக்குத் திரும்பிச்சென்று தன் சொத்துக்களை எல்லாம் விற்று ரூ.45 லட்சத்தை திரட்டி வந்து அணையைக் கட்டி முடித்தார். இதுபோல் இன்னும் பல வியப்பூட்டும் செய்திகளை, விறுவிறுப்பான நடையில் நாவல் போல எழுதியுள்ளார் ஜி. விஜயபத்மா. நன்றி: தினத்தந்தி, 4/6/2014.
—-
புத்திரபாவத்தை அறிய வேண்டுமா?, கடலங்குடி டாக்டர் கே.என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 80ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-262-9.html uபழம்பெரும் சமஸ்கிருத ஜோதிட நூல்களில் இருந்து மொரிபெயர்த்து அதில் உள்ள முக்கிய அடிப்படை கருத்துக்களை மட்டும் தொகுத்துள்ளனர். புத்திர பாவத்தை பற்றிய ஏராளமான கருத்துக்கள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன. ஜோதிடம் பயில்வோர் பாதுகாத்து வைக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 4/6/2014.