மொழிபெயர்ப்பு ஒரு கவின்கலை

மொழிபெயர்ப்பு ஒரு கவின்கலை, வி. சந்திரன், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழிநுட்ப வளாகம், சென்னை 113, பக். 170, விலை 75ரூ.

நூலின் தலைப்பில் நூலாசிரியர் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவின் நூல் வடிவம் இது. தமிழ் மொழியுடன், பிறமொழியிலும் சிறப்பான பாண்டித்தியம் உள்ளவர்களால் மட்டுமே, மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட முடியும். மொழிபெயர்ப்புக்கு இலக்கணம் இருக்கிறது. மேலும், மொழிமாற்றம், செய்யப் பெற்றதும், இலக்கிய அந்தஸ்தைப் பெறக்கூடியதுதான். நிர்வாகம், சட்டம், தொழில்நுணுக்கம் ஆகிய துறைகளில் மொழிபெயர்ப்பில் ஈடுபடுகையில், புதிய சொல்லாக்கம் தவிர்க்க முடியாதது. அந்தப் புதிய சொல் பாமர மக்களிடையே, இலகுவில் பழகுசொல்லாக ஏற்கத்தக்கதாக இருத்தல் அவசியம். இதுபோன்ற பல அடிப்படைத் தகவல்கள் குறித்து ஆராய்ந்து, விளக்கமாக இந்நூலை வழங்கியிருக்கிறார் ஆசிரியர் வி. சந்திரன். நீண்ட காலமாக மொழிபெயர்ப்பு துறைப் பணி, சட்ட அறிவு, மொழிப்பற்று, பிற மொழிகளை மதிக்கும் பரந்த மனம் போன்றவை நூலாசிரியரின் பலம். மொழி பெயர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் ஒரு கையேடு, களஞ்சியம். -ஜனகன்.  

—-

 

அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள், ஏ.பி. ஜெயச்சந்திரன் (கிரிமினல் வழக்கறிஞர்), மணிமேகலைப் பிரசுரம், 7(ப.எண். 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை 17, பக். 216, விலை 120ரூ.

பிரபல தமிழ் நாளேட்டின் ஞாயிறு மலர் பகுதியில் சட்டம் குறித்து வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூல் வடிவில் தயாரித்துள்ளனர். பாமர மக்களும் சட்டம் பற்றிய அனேக விவரங்களை, தகவல்களை இந்நூலில் காண முடிகிறது. எளிய தமிழில், சட்டம் குறித்த பல சந்தேகங்களை, ஆசிரியர் விளக்கியுள்ள பாங்கு பாராட்டுக்குரியது. சாமான்ய மக்களும் சட்டம் பற்றி தெரிந்து கொள்ள இந்நூல் உதவி புரியும். நன்றி: தினமலர் 18/12/2011.

Leave a Reply

Your email address will not be published.