உடன்கட்டை
உடன்கட்டை (ஒரு வரலாற்று ஆய்வு), செ. ஜெயவீரதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 112, விலை 50ரூ.
உடன்கட்டை ஒழிப்பு என்றதும், நமக்கு ராஜாராம் மோகன்ராய் நினைவுக்கு வருகிறார். டிசம்பர் 4, 1829ல் வில்லியம் பெண்டிங் பிரபு உடன்கட்டை ஏறுவது, சட்ட விரோதமான தண்டனைக்குரிய குற்றம் என சட்டம் இயற்றினார். இச்சட்டத்திற்குப் பின்தான் இந்தியாவில் உடன்கட்டையேறும் வழக்கம் ஒழிந்தது. இந்நூலில் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் உடன்கட்டையேறும் வழக்கம் இருந்ததையும், அதற்கான காரணங்களையும் அதை ஒழிக்கச் சட்டங்கள் வந்தது குறித்தும், விரிவாக வரலாற்றின் துணை கொண்டு விளக்கப்பட்டிருக்கிறது. கொங்குநாட்டிலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் இவ்வழக்கம் இருந்த செய்திகள் உள்ளன. இதில் ஜாதி வேறுபாடு காணோம். நூலாசிரியரின் பழகு தமிழ்நடை, நூலை ஒரே மூச்சில் படித்து முடிக்க உதவுகிறது. ஆசிரியரின் ஆய்வுக் கண்ணோட்டம் பாராட்டத்தக்கது. படிக்க வேண்டிய நூல். -டாக்டர் கலியன் சம்பத்து.
—-
ஓரியண்ட் எக்ஸ்பிரஸ், அகதாகிறிஸ்டி, தமிழில்-கொரட்டூர் என்.ஸ்ரீநிவாசாஸ்,கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன், சாலை, தியாகராய நகர், சென்னை 17, பக். 360, விலை 125ரூ.
அகதா கிறிஸ்டி மர்மக்கதைகளின் அரசி என்று அகில உலகப்புகழ் பெற்றவர். அவர் ஆங்கிலத்தில் எழுதிய மர்டர் ஆன்தி ஓரியன்ட் எக்ஸ்பிரஸ் என்ற புகழ் பெற்ற நாவலின் தமிழாக்கமே இந்த நூல். அக்கா கிறிஸ்டியின் அற்புதப் படைப்பான பாய்வுட் என்ற துப்பறிவாளனின் புத்தி சாதுர்யத்தை விளக்கும் இந்த நூல் மர்மக்கதைப் பிரியர்களுக்கு ஒரு அருமையான விருந்து. நன்றி: தினமலர் 18/12/2011.