புதுக்கவிதை மொழி
புதுக்கவிதை மொழி, முனைவர் மா. கோவிந்தராசு, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 225, விலை 125ரூ.
கவிதை வடிவமோ, கவிதைத் தன்மையோ மொழிக் கட்டமைப்போ இல்லாமல் கவிதை எழுதக்கூடாது என்கிறார் ஆசிரியர் மொழியின் மரபினையும், அமைப்பினையும் அறிந்து கவிதை படைக்க வேண்டும் என்கிறார். எழுத்து, சொல், தொடர் அமைப்பு, புதுக்கவிதையில் எவ்வாறு வரவேண்டும், எவ்வாறு வரக்கூடாது என்றெல்லாம் விளக்குகிறார். (உதாரணம்) கவிதைக்கு மொழித் தூய்மை இன்றியமையாததாகும். வழக்கில் உள்ள செந்தமிழ்ச் சொற்களே கவிதையில் இடம் பெற வேண்டும். பிறமொழிச் சொற்களும், கொச்சை மொழிகளும் கவிதைக்கு ஏற்றவை அல்ல என்கிறார். ஆனால் புதுக்கவிதை செய்வோர் இவர் போடும் கட்டளைகளை எல்லாம் ஏற்றுக்கொள்வார்களா என்ன? புதுக்கவிதை யாருக்கும் கட்டுப்படாத சுயம்பு. -எஸ். குரு.
—-
வாடிக்கையாய் சில கொலைகள், அகதா கிறிஸ்டி, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன், சாலை, தியாகராய நகர், சென்னை 17, பக். 448, விலை 120ரூ.
ஆங்கிலத்தில் மர்மமக்களின் ராணி என்று போற்றப்படும் அகதா கிறிஸ்டியின் மர்டர் இன்மெஸபொட்டாமியர் என்ற நாவலின் தமிழாக்கம் இந்த நூல். ஈராக் பகுதிக்கு ஓர் அகழ்வாராய்வுக்குத் தனது கணவருடன் சென்றிருந்தபோது அகதா கிறிஷ்டி தன் கற்பனையை அந்தச் சூழ்நிலையில் மேயவிட்டு படைத்த ஒரு அற்புதமான க்ரைம் கதை இது. -சிவா. நன்றி: தினமலர் 18/12/2011.