யாதுமாகி
யாதுமாகி, எம்.ஏ.சுசீலா, வம்சி புக்ஸ், விலை 180ரூ.
தலைமுறைகள் யாதுமாகி ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைப் பெண்களின் கதையைச் சொல்கிறது. கொள்ளுப்பாட்டி அன்னம்மாவுக்கு பத்து வயதில் திருமணம் நடக்கிறது. அதன் பிறகான அவளது வாழ்க்கை அடுப்படியின் கரியோடு உறைந்து போகிறது. கொள்ளுப்பேத்தி நீனா ஐஏஎஸ் படிக்கிறாள். இந்த தலைமுறை இடைவெளியை வலியோடும், உறுதியோடும் தாங்கிக்கொண்டு கல்வியையும், நம்பிக்கையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறார் அன்னம்மாவின் மகள் தேவி. காலக் கடிகாரத்தின் பெண்டுலம்போல தேவியின் மகள் சாரு அம்மாவின் வாழக்கையையும் தன்னையும் பற்றி நினைத்தபடி இருக்கிறாள். யாருடைய கவனத்தையும், கவராமல் மணம் பரப்பும் ‘நைட் குயின்’ மலரைப்போல வாழ்ந்து மறைந்த பெண்களைப் பற்றிய பதிவு இந்த நாவல். – ஜா. தீபா. நன்றி: அந்திமழை1/1/2016.