ரகசியமாய் ஒரு ரகசியம்
ரகசியமாய் ஒரு ரகசியம், ஓஷோ, தமிழில் சிவாமி சியாமானந்த், கவிதா பதிப்பகம், சென்னை, பக். 992, விலை 600ரூ.
ஓஷோ, தனது பக்தர்களிடம் ஆற்றிய உரைகயின் தொகுப்பாக வெளிவந்துள்ள மற்றும் ஒரு நூல். தியானம் செய்வது எப்படி? துறவறம் என்பது அவசியம்தானா? காமம் என்றால் என்ன? சுய இன்பம் அனுபவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதுதானா? என்பது போன்ற பலதரப்பட்ட விஷயங்களை அப்பட்டமாக அலசி இருக்கிறார். இடையிடையே ருசிகரமான சிறுகதைகள், புத்தர், போதிதர்மர், குரு லூத் சூ போன்றவர்களின் மேற்கோள்கள் ஆகியவற்றைக் கூறி படிக்க ஆவலைத் தூண்டுகிறார். ஓஷோவே தமிழில் பேசுவதுபோன்று எண்ணும் வகையில் சுவாமி சியாமானந்த் மிகச் சரமாக தமிழில் தந்து இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 22/10/2014.
—-
ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வு, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. இளைஞர்களின் ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்கும் போட்டித் தேர்வுத் தொட, தினத்தந்தியில் எழுதியவர் நெல்லை கவிநேசன். அவரது குறிப்பிடத்தக்க படைப்புதான் ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வு (பேப்பர் 2) என்ற இந்நூல். இந்திய குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ் பற்றிய அடிப்படை விவரங்களை தெளிவுற விளக்குவதுடன், முதல் நிலைத் தேர்வு பற்றிய விரிவான விளக்கங்களுடன் வெளியாகி உள்ளது இந்த நூல். வெறும் கேள்வி பதில்களை மட்டும் அளிக்காமல் கேள்விகள் கேட்கப்படும் விதம், எளிதாக பதிலளிக்கும் விதம், வினாக்களை புரிந்து கொள்வதற்கான வழிமுறை, அதிக மதிப்பெண் பெறும் வழிகள், அதற்காக வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் என அனைத்தும் விளக்கப்பட்டு உள்ளது. போட்டித்தேர்வு பற்றிய நுணுக்கத்தை புதிய கோணத்தில் அலசும் இந்நூல் இளைய தலைமுறையினருக்கு பெரிதும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 22/10/2014.