ரகசிய ஆசைகள்

ரகசிய ஆசைகள், ப்ரீத்தி ஷெனாய், தமிழில் என்.டி. நந்தகோபால், சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு, சென்னை, விலை 200ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-294-0.html ஆசைகளின் பட்டியல் மணமாகி குடும்பம் நடத்தும் மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்த தீக்ஷா எனும் பெண் தான் எப்படி நடத்தப்படுகிறோம், தன்னுடைய ரகசியமான ஆசைகள் என்ன என்பதனை உணர்கிறார். அவற்றை அவர் அடைந்தாரா இல்லையா என்பது சுவாரசியமான நடையில் நாவலாகி உள்ளது. இது ப்ரீத்தி ஷெனாய் ஆங்கிலத்தில் எழுதிய The Secret Wish list என்ற நாவலின் தமிழ் வடிவம். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விட, வீட்டில் வெறுமனே இருக்கும் குடும்பத் தலைவிகள் பேசத் துணியாதவற்றை தன் பாத்திரத்தின் வழியே நட்பு, காதல், உறவுச் சிக்கல்கள் வழியே பேசியிருக்கிறார் நாவலாசிரியர் ப்ரீத்தி ஷெனாய். தீக் ஷா, சந்தீப், ஆங்கிட், விபா, தனு போன்ற கதாபாத்திரங்களைச் சுற்றி பின்னப்பட்ட கதை. தோழி தனுவின் குறும்புத்தனத்தால் பூக்கும் காதலை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா எனும் தயக்கத்தோடு துவங்கும் கதையோடு தீக்ஷாவின் மணவாழ்க்கையின் சலிப்புத்தட்டும் பக்கங்களையும் முன் பின்பாக பேசுகிறது. மணவாழ்க்கைக்கு வெளியே உருவாகும் காதலை உறவுகள் எதிர்கொள்ளும் நிலையை மிக அழகாக எடுத்துச் சொல்கிறார். தாயின் பக்கம் நிற்கும் குழந்தையின் வழியே இன்றைய இளைய தலைமுறையிடம் உள்ள பரந்த மனப்பான்மையை விவரிக்கிறார். சல்சா நடனம் கற்றுக்கொள்ளச் செல்லும் தீக்ஷாவை நடன தளத்திற்கே சென்று நடனப் பயிற்சியாளரை அடித்துவிட்டு வன்மத்துடன் அழைத்துவருகிறான் கணவன் சந்தீப். அன்றிரவு கணவன் மீதான அச்சத்துடன் இருக்கும் அவள் மீது வன்முறையான பாலியல் உறவைப் பிரயோகிக்கிறன். ஆணின் உச்சகட்ட ஆதிக்கத் திமிரின் முன்பு நவீன காலப் பெண் தற்காலிகமாக அடங்கிப்போனாலும் அவளது சுதந்திர வேட்கை தீருவதில்லை. பதின்மவயதில் அவளுக்கு முகிழ்த்த ஒரு காதலின்போது அவள் பெற்ற ஒரு முத்தத்தை அவளது தாயார் பெரிதுபடுத்தி அவளது சிறகுகளை வெட்டிவிடுகிறார். பின்னாளில் அதே காதலனுடன் அவள் திருமணத்தைத் தாண்டிய உறவைக் கொள்கிறாள். தன் பதின்ம வயதில் இருந்த காதலை மீண்டும் கண்டடைந்து மகிழ்ச்சி கொள்கிறாள். இது ஒரு நெஞ்சைத் தொடும் சிக்கலான உறவுகளின் சித்திரமாக வளர்ந்து நிற்கிற நாவல். ஒரு பெண் அவளது ரகசிய ஆசைகளின் பட்டியலில் இருக்கும் எல்லாவற்றையும் அவள் தேடுகிறாள். இன்றைய நவீனப் பெண்ணியத்தின் கூறுகள் வெளிப்படும் இடமாக நான் இந்த திருமண பந்தத்தை முடிச்சுக்க விரும்பறேன். என்னுடைய வாழ்க்கையை நான் புதிதாக உருவாக்க விரும்பறேன், உனக்கு என் குழந்தையோட அப்பாங்கற மரியாதையை நான் கண்டிப்பா கொடுப்பேன். ஆனா உனக்கும் எனக்கும் இனி உண்மையில் ஒண்ணும் கிடையாது என்கிற இறுதிப்பகுதி அமைகிறது. சிக்கலில்லாத மொழிபெயர்ப்பில் உருவாகி உள்ளது நூல். -கடங்கநேரியான். நன்றி: அந்திமழை, 1/9/2014.                                                                            

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *