ராஜாஜி எழுதிய மதுவிலக்கு
ராஜாஜி எழுதிய மதுவிலக்கு, முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, விலை 30ரூ.
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்ட ரா44, மதுவிலக்கை அமல் நடத்த வேண்டும் என்பதற்காகவும், போராடி வந்தார். அதில் வெற்றியும் பெற்றார். தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. ஆனால் பிறகு தி.மு.க. ஆட்சியின்போது மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் மதுவிலக்கை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய கட்டுரைகள், மறு பதிப்பு செய்யப்பட்டு உள்ளன. மதுவிலக்கு பற்றியும் அக்காலத்தில் ராஜாஜி நடத்திய போராட்டம் பற்றியும் அறிய இந்நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 26/6/2013.
—-
உளவியல் மேதை ஸ்க்மண்ட் ப்ராய்டு, எம்.ஏ. பழனியப்பன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை 17, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-073-1.html
ஸிக்மண்ட் ப்ராய்டு என்பவர் மனநோய் மருத்துவர். ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் பிறந்தவர். அவரது வாழ்க்கை வரலாறும், உளவியல் பற்றிய அவரது தத்துவங்களும் விரிவாக தரப்பட்டுள்ளன. கறைகளைப் பற்றியும், அதன் வகைகளைப் பற்றியும் ஒவ்வொருவரின் மனநிலை பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 26/6/2013.
—-
சின்ன சின்ன மின்னல்கள், சிவராஜுல் ஹசன், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை 12, விலை 50ரூ.
சமுதாயத்தின் இன்றைய நிலையை பட்டியலிட்டு சிந்திக்கத் தூண்டும் வகையில் கருத்துகளை விதைத்துள்ளார். நூலில் இடம் பெற்றள்ள 50 கட்டுரைகளிலும் சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளை விவாதித்து கேள்வி எழுப்பி சுவைபட நூலை அலங்கரித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 26/6/2013.