வரலாற்றில் மணிமங்கலம்

வரலாற்றில் மணி மங்கலம், அனந்தபுரம் கோ. கிருட்டின மூர்த்தி, திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 304, விலை 200ரூ.

மகேந்திரவர்மனிடம் தோல்வி கண்ட இரண்டாம் புலிகேசி, நரசிம்மவர்மனை வெற்றிகாண காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள மணிமங்கலம் என்ற இடத்தில் போர் புரிந்து தோல்வியைத் தழுவுகிறான். இரண்டாம் புலிகேசியின் போர் முயற்சியால் பல்லவ நாடு பெரும் துன்பத்தைச் சந்தித்திருக்கிறது. இதனால் நரசிம்மவர்மன், இரண்டாம் புலிகேசியை அவன் நாட்டிலேயே அவனைத் தோற்கடிக்கிறான். அதனால் நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிரம் பல்லவருக்கு உரியதாக நிலைபெற்றது. இதனால் பல்லவ நாட்டின் முக்கிய இடங்களாகப் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் ஆகியவை இருந்துள்ளன, இரத்தின கிராமம் என்பது கடல் வணிகர்கள் வாழ்விடத்தை குறிக்கும். எனவே கடல் வணிகர்கள் நிறைந்த ஊராகவும், செல்வந்தர்கள் நிறைந்த ஊராகவும், மணி கிராமம் மணிமங்கலம் திகழ்ந்திருக்கிறது. இதனையே மணிமங்கலம் போர் உணர்த்துகிறது. இவ்வாறு பல்லவர் காலத்தில் சோழர் காலத்தில் மணிமங்கலத்தின் நிலைமை என்ன என்பது குறித்த வரலாற்றுப் பதிவு. ஆவ்வூரைச் சுற்றியுள்ள சிவ-விஷ்ணு ஆலயங்கள், கல்வெட்டுக் குறிப்புகள், அறியப்படாத பல அரிய தகவல்கள் போன்றவை ஆதாரங்களுடன் பதிவாகியுள்ளன. வரலாற்றுப் பிரியர்களுக்கு உகந்த ஆவணப்பதிவு. நன்றி: தினமணி, 26/9/11.  

—-

 

ஆயிர ஆயிரத்து ஆழியான் ஆயிர நாமம், தொகுப்பாசிரியர் ஏ. திருமலை, நம்மாழ்வார் பதிப்பகம், 27, 2வது பள்ளிக்கூடத் தெரு, பட்டாபிராம், சென்னை 72.

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பொருள் விளக்கம் இந்த நூல். முதலில் சஹஸ்ரநாமத்தின் மூலமும் பொருளும் கொடுத்துள்ளார். பின்பகுதியில் ஒவ்வொரு சுலோகத்திலும் வரும் பகவந் நாமங்களின் எளிய பொருளை ஓரிரு வரிகளில் கொடுத்துள்ளார். இந்த நாமாக்களுக்கு இடையிடையே பாசுரங்களில் ஆழ்வார்கள் சுட்டும் பொருளையும் தந்துள்ளது சிறப்பான அம்சம். மேலும் ஆயிரம் நாமங்களையும் அகரவரிசைப் படுத்தியுள்ளது தொகுப்பாசிரியரின் சிறப்பான பணி. வீட்டில் சஹஸ்ரநாம பாராயணம் செய்வோருக்கு சிறந்த துணை இந்த நூல். நன்றி: தினமணி, 26/9/11.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *