வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள்
வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள் (ஆசிரியர்:தி.கலியராஜன்; வெளியிட்டோர்: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை – 17, விலை ரூ.100)
திருவள்ளுவர் உலகிற்கு தந்த உன்னத திருக்குறளின் சில குறள்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் விமர்சிப்பது படிக்க சுவாரசியமாக இருக்கிறது. ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒரு சிறுகதை அல்லது தற்போதைய அரசியலுடன் தொடர்புபடுத்தி விளக்கி இருப்பது தனிச்சிறப்பு. நன்றி: தினத்தந்தி (6.3.2013).
—–
மன அழுத்தம் ஏற்படாமல் அமைதியாக வாழ்வது எப்படி? (ஆசிரியர்: ஏ.கே.சேஷய்யா; வெளியீடு: உஷா புத்தக நிலையம், 1, நரசிம்மன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33: விலை:ரூ. 42)
மன அழுத்தம் காரணமாக கோபம், பொறாமை, எரிச்சல், உண்டாகின்றன். மன அழுத்தம் இன்றி அமைதியாக வாழ எளிதாக கடைபிடிக்கும் வழிகள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி (6.3.2013).
—-
தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ( ஆசிரியர்: முனைவர் அ.ஆறுமுகம், வெளியிட்டோர்: பாவேந்தர் பதிப்பகம், ’சீரகம்’, 4/79 நடுத்தெரு, திருமழபாடி, அரியலூர் வட்டம், அரியலூர் வாவட்டம்; விலை: ரூ.120)
அரியலூர் மாவட்டத்தை ஆண்ட மன்னர்கள் மாவட்டத்தில் இருந்த தமிழ் சங்கங்கள் அவை தமிழை வளர்த்த விதம் போன்ற அரிய தகவல்களை கொண்ட நூல். தமிழ்நாட்டின் 31-வது மாவட்டமான அரியலூர் பண்டைய கால புதைபொருள் பொக்கிஷமாக விளங்கியதை ஆசிரியர் முனைவர் அ.ஆறுமுகம் உணர்த்தியிருப்பது அருமை. வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. நன்றி: தினத்தந்தி (6.3.2013).