வால்மீகி இராமாயணம்
வால்மீகி இராமாயணம், அழகர் நம்பி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 200ரூ.
எத்தனை முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவத்தைத் தரக்கூடிய, காலத்தால் அழியாத காவியமான ராமாயணத்தை பலரும் பல வழிகளில் எடுத்துக் கூறி இருக்கிறார்கள். வால்மீகி முனிவர் அருளிய ராமாயணத்தை எளிய தமிழில் ஒரு நாவல்போல சுவைபட கொடுத்து இருப்பது புதுமை என்பதோடு, ராமாயணத்தின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் கருவியாக இந்த நூல் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. உத்ர காண்டம் தவிர்த்து மற்ற 6 காண்டங்கள் விளக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பும் அதன் உள்ளே சென்று படிக்கத் தூண்டும் வண்ணம் அமைந்து இருப்பது சிறப்பு.
—-
காதல் கரும்பு, கவிஞர் பெ. அறிவழகன், அறிவு பதிப்பகம், பாவேந்தர் இல்லம், 105, புதுவீதி, சின்னசேலம், விழுப்புரம்-606201, விலை 120ரூ.
காதல் கரும்பு கவிதை தொகுப்பில் நாட்டுப்புறக்காதல் மனதில் அருவியாக கொட்டுகிறது. மனிதநேயம், கல்வி கவிதைகளில் சமக உணர்வு பளிச்சிடுகிறது. அரசியல் தலைவர் பற்றிய கவிதைகள் யதார்த்தம். இதில் இணைக்கப்பட்டு உள்ள திருமண வாழ்த்து மடல் கவிதைக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.
—-
ரியல் எஸ்டேட் குற்றங்கள், வக்கீல் ஆ. ஆறுமுகம் நயினார், சி. சீதாராமன் அண்டு கோ பி. லிட், சட்டப்புத்தக வெளியிட்டார், 73/37, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை சென்னை 14, விலை 140ரூ.
சொத்துக்கள் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகளில் குறிப்பாக வாங்குபவர்களே கவனமாயிருத்தல் வேண்டும் என்ற சட்ட அறிவுறுத்தலுக்கு உட்பட்டு மிகத் தெளிவாகவும், அனைவரும் புரிந்து கொள்ளும்வகையில் எடுத்துரைத்துள்ளார். நடைமுறைகள், தேவைகள், கடமைகள் முழுமையான முறையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நூலை படிப்பதன் மூலம் ஏமாற்றும் கூட்டத்திலிருந்து எப்படி நல்ல, நாணயமான, சாதாரண மனிதர்கள் தப்பலாம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 19/2/2014.