வாழும் தெய்வம் மகாத்மா
வாழும் தெய்வம் மகாத்மா, நா. பெருமாள், ஐஸ்வர்யா பப்ளிகேஷன்ஸ், பிளாட் எண் 46, 2வது குறுக்குத் தெரு, நாகப்பா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, பக். 224, விலை 130ரூ.
இப்படியொரு மனிதர் தசையும், தோலுமாய், ரத்தமும், நரம்புமாய், எலும்புமாய் வாழந்தார் என்று வருங்கால உலகம் நம்ப மறுக்கும் காந்தியடிகளை பற்றி பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கருத்து தெரிவித்திருக்கிறார். இப்படியொரு மாமனிதர் உலகில் வாழ்ந்தது உண்மைதான் என, எதிர்கால சந்ததியினர் அனைவரும் நம்பும் வகையில், காந்தியின் பிறப்பு முதல் மறைவு வரை, முக்கியமான நிழற்படங்களையும், சிறிய குறிப்புகளுடன், 68 தலைப்புகளில் அண்ணலின் கருத்துக்களை மிக எளிய நடையில் சுவையாகத் தந்திருக்கிறார் ஆசிரியர். மிகவும் பயனுள்ள நூல். -மயிலை சிவா. நன்றி: தினமலர், 20/11/11
—-
சுக்கிர நீதி, மு. கதிரேசச் செட்டியார், பாரி புத்தகப் பண்ணை, சென்னை 108, பக். 400, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-5.html
அசுரருள் தலையாயவனான சூரபத்மனின் குரு சுக்கிரர், அவர் கூறிய அரச நீதிகளைத் தொகுத்து உரைக்கப் புகுந்த நுலாசிரியர் தேவகுருவின் பெயரால் வியாழ நீதி என்று கூறாது, அசுரகுருவின் பெயரால் சுக்கிர நீதி என்று வைத்துள்ளார். இந்நூலின் கருத்துகள், அரசன், சமூகம் இவற்றுக்கான ஒழுக்க நெறியைக் கற்பிப்பவை. இவ்வுலகத்தில் அந்தணராதலும், வணிகராதலும் சூத்திரராதலும் பிறப்பினால் இல்லை. குணம் செயல்களாலேயே வேறுபடுத்தப்பட்டனர் என்று பல இடங்களில் வலியுறுத்துகிறது சுக்கிரநீதி. திருக்குறள் கருத்துகள் இந்நூலில் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. அரசன் கடுஞ்சொல்லனாக இருத்தல் கூடாது என்னும் சுக்கிரநீதி, காட்சிக்கு எளியனாயிருத்தல் குறித்துப் பேசவில்லை. இந்த நூலில் 5 அத்தியாயங்களில் 2200 சுலோகங்கள் உள்ளன. மக்களது ஒழுக்கம் நிலைபெறவும், அரசியல் முறை சிறப்பாகத் தழைப்பதற்கும் நீதிநூல் அறிவு முக்கியம் என்கிறது இந்நூல். ஊழ், முயற்சி எனும் இரண்டில் முயற்சியையே கைக்கொள்ள வேண்டும் என்கிறது. அரசு இலக்கணம் இல்லாத அரசன் புலவர்களால் நாயோடு ஒப்பிட்டு எண்ணப்படுவான் என்கிறது. அறத்தை ஒழுக்க நெறியை விரும்பும் அனைவரும், படித்தறிய வேண்டிய அற்புதப் படைப்பு. நன்றி; தினமணி, 25/3/13.