வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள்
வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள், நீதியரசர் எம். கற்பகவிநாயகம், வானதி பதிப்பகம், சென்னை, பக். 317, விலை 100ரூ.
![]()
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-548-0.html நீதியரசர் எம். கற்பகவிநாயகம் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. பெண்கள் தினவிழா, பட்டமளிப்பு விழா, மகளிர் சிறைவாசிகளுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம், யோகா எக்ஸ்னோரா தொடக்க விழா, புத்தகத் திருவிழா என 16 நிகழ்ச்சிகளில் பங்கேற்று நீதியரசர் பேசியவற்றைப் படிக்கும்போது நேரில் கேட்ட உணர்வு ஏற்படுகிறது. தன்னம்பிக்கை, இறை நம்பிக்கை, தனி மனித ஒழுக்கம், நேர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை சிறு சிறு சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கணவன் மனைவி உறவை பற்றிக் குறிப்பிடும்போது காலை வேளைகளில் சிதம்பரமாகவும், மாலை வேளைகளில் மதுரையாகவும் இருந்தால் இரண்டும் சேர்ந்து அந்த வீடு நல்ல வீடாக உருப்பெறும் என்கிறார் நூலாசிரியர். ஒழுக்கம், அடக்கம், பொறுமை ஆகிய மூன்று குணங்களும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது என்கிறார். ஆழ்ந்த சிந்தனைகளை இந்நூலில் உள்ளடக்கியதாக இருக்கிறது. பகவத்கீதை, திருக்குரான், பைபிள், விவேகானந்தர் எனப் பல்வேறு உதாரணங்கள் கட்டுரைகளின் விறுவிறுப்புக்கு பெரிதும் உதவுகின்றன. நன்றி: தினமணி, 8/10/2012.
—-
தாகம், சி. ஆறுமுகம், அதியன் பதிப்பகம், சிதம்பரம், விலை 75ரூ.
பல்வேறு விஷயங்கள் குறித்தும் பாடியிருக்கிறார் கவிஞர் சி. ஆறுமுகம். அதில் நிலா முதல் தீவிரவாதம் வரை அடங்கும். தனது தாய் தேசமான இந்தியா பற்றியும்கூட கவிதை வடிக்கத் தயங்கவில்லை. மரபு வழி பாடல்களை விரும்புவோரை இந்நூல் கவரும். நன்றி: தினத்தந்தி, 5/3/2014.