வாழ்வியல் சிந்தனைகள்
வாழ்வியல் சிந்தனைகள், தர்மராஜ் ஜோசப், யுவன் பப்ளிஷர்ஸ், 266 அம்மன் கோவில்பட்டி தென்பாகத்தெரு, சிவகாசி – 626 123, விலை 100ரூ.
சமுதாய வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில், முதியோர் குரல், இலவசம் ஏற்கலாமா? ஊழல் என்றால் என்ன? திருமண முறிவுகள் போன்ற 32 கட்டுரைகளும் சிந்தனையை தூண்டும் வகையில் இருக்கின்றன. கனவுகள் ஏற்படுவதற்கான காரணங்களை விளக்குவதுடன் அதற்கு பொருள் இருப்பதாக கருதினால் மூடநம்பிக்கை என்றும் கூறுகிறார் நூலாசிரியர். ஆங்கில மோகத்தால் தமிழ் சொற்கள் அழிவதை சுட்டிக்காட்டுவதுடன் தமிழ் மொழி, இனம் வளர எங்கும் தமிழை கட்டாயமாக்க வேண்டும். ஆண்டில் ஒரு வார்த்தை தமிழ் வாரமாக அனுசரிக்க வேண்டும் போன்ற தனது வேட்கையை வெளிப்படுத்துகிறார். நன்றி – தினத்தந்தி, 6 பிப்ரவரி 2013.
—-
உங்களை உயர்த்தும் நல்ல உறவுகள், சி.எஸ். தேவநாதன், சங்கர் பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2-வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை- 49, விலை 50ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-583-9.html ஒவ்வொருவரின் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் கணவன், மனைவி, குழந்தைகள், நண்பர்கள், பணியாளர்கள், நிறுவன வாடிக்கையாளர்கள், சுற்றத்தினர், இவர்களிடம் நாம் எவ்வாறு அணுகி நம் உயர்விற்கு அவர்களைப் பயன்படுத்தவேண்டும் என்பதை விவரிப்பதே இந்நூல். நன்றி – தினத்தந்தி, 6 பிப்ரவரி 2013.