விடியலை நோக்கி முடிவற்ற பயணம்

விடியலை நோக்கி முடிவற்ற பயணம், த.ஜெ.பிரவு, ஜெ. அனிதா பிரபு, சென்னை, விலை 250ரூ.

லட்சியங்களின் தோல்வி இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை எழுதியுள்ளது த.ஜெ.பிரபுவின் நாவல் இது. நாவலின் கதைக்களமும் அந்தத் துறைதான். ஆறு அங்கங்களாக எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல், 1980களுக்கு உயிர்கொடுத்திருக்கிறது. எண்பதுகளில் தமிழகத்தில் தொழிற்சங்க அரசியல் தீவிரமாக இரந்த காலகட்டத்தில் அதுசார்ந்த தொழிலாளர்களின் நடவடிக்கைகள், நிர்வாகங்களின் எதிர்வினைகள் போன்றவற்றைத் துல்லியமாகப் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர். அரசியல் சார்ந்த லட்சியக் கனவுகளைச் சிதறடிக்கும் யதார்த்தத்தை இந்தப் படைப்பின் வழியாக விரிவாகப் பேசுகிறார் த.ஜெ.பிரபு. நன்றி: தி இந்து.  

—-

கடைசியில் வருபவன், ராஜன் ஆத்தியப்பன், சிலேட், நாகர்கோவில், விலை 100ரூ.

தனிக் கலாச்சாரக் கவிதைகள் அசலான பிராந்தியத் தன்மையும், தனிக் கலாச்சாரமும் கொண்ட கவிதைகளாக ராஜன் அத்தியப்பனின் கவிதைகள் இருக்கின்றன. எப்போதும் கடைசியில் வருபவரின் வலி, தனிமை தவிர எப்போதாவது கிடைக்கும் அதிர்ஷ்டத்தையும் இவர் நுட்பமாகப் பதிவு செய்கிறார். கட்டிடத் தொழிலாளியாகப் பணிபுரியும் ராஜன் அத்தியப்பனின் பார்வை, பெருநகரத்தில் கட்டி முடிக்கப்பட்ட வானுயர்ந்த கட்டிடத்திலிருந்து வெளியேறும் கடவுளின் குஞ்சுகளைப் பார்க்கும் வாய்ப்பு பெற்றவையாக உள்ளன. அம்மாவால் சுடப்படும் முதல் பணியாரம் பூஜிக்கப்பட்டு, கடைசியில் கோழிகளுக்கு உணவாகும் கிராமியச் சித்திரம் தமிழுக்குப் புதியது. தமிழில் சமீபத்தில் எழுதப்படும் கவிதைகள் பாவனை மற்றும் மிகையுணர்வால் வெறும் செய்யுள்களாக, சொற்கூட்டங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், தனது அனுபவங்களை வெளிப்படுத்துவதற்காக, சுயமான மொழியைத் தேடும் திணறலின் மூலம் தன் கவிதைகளைப் படைத்திருக்கிறார் ராஜன் அத்தியப்பன். நன்றி: தி இந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *