விருந்தும் மருந்தும்

விருந்தும் மருந்தும், பேரா. இரா. மோகன், வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 168, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-522-8.html

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த நூலாசிரியர் டாக்டர் மூ.வ.வின் அன்பிற்குப் பாத்திரமானவர். ஆழமான சிந்தைகளின், வெளிப்பாடாக உள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பில் அரசியல், ஆனமிகம், இலக்கியம், தனிமனிதர்களின் நற்குணங்கள், தொடர்பான விஷயங்கள் நிறைய உள்ளன. எல்லாமே வாழ்க்கைக்கும், அதனை வளப்படுத்திக் கொள்வதற்கும், வழிசொல்லும் கட்டுரைகள். இவை அனைத்தும் இலக்கியம், சுவை எனும் தேனில் குழைத்து வழங்கப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு. -ஜனகன். நன்றி:தினமலர், 8/4/2012.  

—-

 

திருமந்திரம் சில பாடல்கள் விளக்க உரையுடன், கிநா. செநா.துரை அந்தமான் சித்தர், திருச்சித்துவெளிக்கூடம், எம்பி. 281, பொங்கிச்சாங் போர்ட்பிளேயர், அந்தமான் 744101, பக். 68, விலை 99ரூ.

சில பாடல்களுக்க விளக்க உரை என்பதற்கொப்ப 114 பாடல்களுக்கு எளிய விளக்கம் அளித்துள்ளார். திருமந்திரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் படித்து மகிழலாம். -எஸ். திருமலை. நன்றி:தினமலர், 8/4/2012.  

—-

 

குறள் வழிச்சிந்தனைகள், அனகை மாணிக்க ஆறுமுகம், ஏ.எஸ்.மாணிக்கம் அறக்கட்டளை, 30, ஜி.எஸ்.டி.சாலை, பல்லாவரம், சென்னை 43, விலை 50ரூ.

53 தலைப்புகளில் சில குறிப்பிட்ட குறள்களுக்கு எடுத்துக்காட்டுடன் உரைஎழுதி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 30/10/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *