விஷ்ணுபுராணக் கதைகள்

விஷ்ணுபுராணக் கதைகள், குரு பிரியா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 90ரூ.

பதினெண் புராணங்களில், மிகவும் பழமையானது விஷ்ணுபுராணம் என்பர். இந்த நூலில் 33 அத்தியாயங்கள் உள்ளன. பராசரமுனிவர், மைத்ரேய மகரிஷிக்கு இந்த விஷ்ணு புராணத்தைக் கூறுகிறார். இந்திரனுக்கு துர்வாச முனிவர் சாபமிட்ட வரலாறு (பக். 26), துருவனின் வரலாறு (பக். 33), பிரகலாத சரித்திரம் (பக். 43), விஷ்ணு உபாசனை செய்பவரின் பலன்கள் (பக். 68), கலியின் தோஷங்கள் குறித்த பட்டியல் (பக். 96), கம்சனைக் கண்ணன் வீழ்த்திய விவரம் (பக். 128), ருக்மணி கல்யாணம் குறித்த செய்திகள் (பக். 137), யாதவ குலத்தில் சிறுவர்கள், கண்ணனின் மகன் சாம்பனுக்கு, கர்ப்பிணி வேடம் போட்டு, ரிஷிகளின் முன்நிறுத்தி கேலியாக வினா கேட்க, ரிஷிகள் சாபமிட, அதனால் யாதவ குலமே அழிந்த வரலாறு (பக். 141-149) ஆகியவை இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆன்மிக அன்பர்களுக்கு இந்த நூலில், சுவையான செய்திகள் காத்திருக்கின்றன. உதாரணமாக, கிருஷ்ண யஜுர்வேதம் என்ற தைத்திரியம் கிடைத்த சுவையான செய்தியைக் கூறலாம். (பக். 164). -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 16/8/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *