விஷ்ணுபுராணக் கதைகள்

விஷ்ணுபுராணக் கதைகள், குரு பிரியா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 90ரூ. பதினெண் புராணங்களில், மிகவும் பழமையானது விஷ்ணுபுராணம் என்பர். இந்த நூலில் 33 அத்தியாயங்கள் உள்ளன. பராசரமுனிவர், மைத்ரேய மகரிஷிக்கு இந்த விஷ்ணு புராணத்தைக் கூறுகிறார். இந்திரனுக்கு துர்வாச முனிவர் சாபமிட்ட வரலாறு (பக். 26), துருவனின் வரலாறு (பக். 33), பிரகலாத சரித்திரம் (பக். 43), விஷ்ணு உபாசனை செய்பவரின் பலன்கள் (பக். 68), கலியின் தோஷங்கள் குறித்த பட்டியல் (பக். 96), கம்சனைக் கண்ணன் வீழ்த்திய விவரம் (பக். […]

Read more

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கல்வியை கடல் என்பார்கள், ஆனால் நூலாசிரியர் கல்வியை ‘பூங்கா’ என்று புதிய சிந்தனையுடன் அணுகியுள்ளார். கல்வி களஞ்சியமாக திகழும் இந்த நூலில், சுவையான கருத்துக்களும் நீதிக்கதைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. நூலில் உள்ள கல்விச்சிந்தனை, குருவணக்கம், இளைஞர்கள், பெண்கள், கல்வித் தத்துவங்கள் ஆகிய தலைப்புகள் வாசிப்பவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. நாட்டை வல்லரசாக்கும் வலிமையும், புத்திக்கூர்மையும் இளைஞர்களுக்கு அவசியம் வேண்டும் என்று நூலாசிரியர் முனைவர் மு.ராசாராம் ஐ.ஏ.எஸ். வலியுறுத்துகிறார். திசைமாறி போகும் […]

Read more