கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.

கல்வியை கடல் என்பார்கள், ஆனால் நூலாசிரியர் கல்வியை ‘பூங்கா’ என்று புதிய சிந்தனையுடன் அணுகியுள்ளார். கல்வி களஞ்சியமாக திகழும் இந்த நூலில், சுவையான கருத்துக்களும் நீதிக்கதைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. நூலில் உள்ள கல்விச்சிந்தனை, குருவணக்கம், இளைஞர்கள், பெண்கள், கல்வித் தத்துவங்கள் ஆகிய தலைப்புகள் வாசிப்பவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. நாட்டை வல்லரசாக்கும் வலிமையும், புத்திக்கூர்மையும் இளைஞர்களுக்கு அவசியம் வேண்டும் என்று நூலாசிரியர் முனைவர் மு.ராசாராம் ஐ.ஏ.எஸ். வலியுறுத்துகிறார். திசைமாறி போகும் இளைஞர்களுக்கு இந்நூல் ஒரு கடிவாளமாக இருக்கிறது. கல்வியாளர்களும், மாணவர்களும் இந்நூல் கூறும் அறிவுரைகளை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றியை எளிதாக பெற முடியும். நன்றி: தினத்தந்தி, 114/1/2015.  

—-

 

விஷ்ணு புராணக் கதைகள், குரு பிரியா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 90ரூ.

விஷ்ணு பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அது பற்றிய புத்தகம் இது. கலியுகம் பற்றியும், விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் பற்றியும் சுவையான தகவல்கள் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 114/1/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *