வெற்றி வெளியே இல்லை
வெற்றி வெளியே இல்லை, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-772-8.html
தன்னம்பிக்கை கட்டுரைகள் கொண்ட நூல். விதைக்குள்ளே மரம் மறைந்திருப்பதைப்போல முயற்சியும், உற்சாகமும், உழைப்பும், ஊக்கமும் நமக்குள்ளே மறைந்து இருக்கின்றன. அயராத முயற்சியால், மூடி இருப்பதை அகற்றி ஆற்றலை வெளிப்படுத்தினால் வெற்றிதான் என்பதை எளிமையான கட்டுரைகள் மூலம் கூறுகிறார் வழக்கறிஞர் த. இராமலிங்கம். நன்றி: தினத்தந்தி, 18/12/13.
—-
தமிழ் இன்பம், ரா.பி. சேதுப்பிள்ளை, பூம்புகார் பதிப்பகம்.
தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளையைப் பற்றி தெரியாதவர்கள் இல்லை. உலக இலக்கியங்களில் தமிழில்தான், உயிரோட்டம் வாய்ந்த இலக்கியங்கள், தமிழில்தான் உயிரோட்டம் வாய்ந்த இலக்கியங்கள் நின்று நிலவுகின்றன. அவற்றை ஆரம்ப கட்ட வாசகனுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த நூலை சேதுப்பிள்ளை எழுதினார். இதில் கம்பன், சேக்கிழார், திருவருட்பா, புறநானூறு, சிலப்பதிகாரம், கந்த புராணம், பெரியபுராணம் ஆகிய இலக்கியங்களின் சொற்சுவை பொருட்சுவையை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியுள்ளார். செய்யுள் நடையில் அமைந்த இலக்கியங்களை படிப்பதற்கு பயிற்சி தேவை. இன்றைய நிலையில், அது எல்லாரும் வாய்ப்பது இல்லை. சேதுப்பிள்ளையின் இந்த நூல், இலக்கியத்தில் ஆர்வம் உடையவர்களுக்கு வழிகாட்டியாக இன்றும் திகழ்கிறது. 200 பக்கங்கள் கொண்ட தமிழ் இன்பம் நூல், எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் படிக்க கிடைக்கிறது. நன்றி; தினமலர், 22/12/13.