வைரமணிக் கதைகள்
வைரமணிக் கதைகள்,வையவன், தாரிணி பதிப்பகம், பக். 418, விலை 450ரூ.
சிறுகதை என்ற இலக்கிய முயற்சி, எதிர் காலத்தில் எங்கே இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கும் நேரத்தில், வெளிவந்திருக்கிறது இந்த சிறுகதை தொகுப்பு. ஆசிரியர் அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தமிழ்ச் சிறுகதைகள் உலகில் தனி முத்திரை பதித்தவர் என்று போற்றப்படுபவர். 418 பக்கங்களில் 80 சிறுகதைகள் அடங்கிய இந்த பிரம்மாண்டமான தொகுப்பு சிறுகதைப் பிரியர்களுக்குக் கொடுத்த விருந்து என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு கதையுமே படித்து ரசிக்க வேண்டியவை. -மயிலை சிவா.
—-
வள்ளலாரும் வேதாத்திரி மகரிஷியும், அ.நி. மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், பக். 136, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-121-1.html
மானுடநேயம் கொண்ட வள்ளலாரையும், பாமர மக்களின் தத்துவ ஞானியாகப் போற்றப்படும் வேதாத்திரி மகரிஷியையும் ஒப்பிட்டு இந்த நூல் எழுதியுள்ளார் ஆசிரியர். வள்ளலாரின் தத்துவ தரிசனம் சன்மார்க்கமாகும். வேதாத்திரியின் வாழ்க்கைக் கண்ணோட்டம் வேதாத்திரியம். இருவருமே பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் கல்வியறிவை, அவ்வளவாகப் பெற்றவர் அல்லர். இந்த இரண்டு மகான்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்களது கொள்கைகளையும் மானுட சேவைகளையும் 37 தலைப்புகளில் ஒப்பீடு செய்து இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர். அவசியம் படிக்க வேண்டிய நூல். -சிவா. நன்றி: தினமலர், 24/11/13.