வைரமுத்து சிறுகதைகள்
வைரமுத்து சிறுகதைகள், கவிஞர் வைரமுத்து, சூர்யா வெளியீடு, விலை 300ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000025177.html கவிதைகளிலும், திரைப்படப் பாடல்களிலும் சிகரம் தொட்ட கவிப்பேரரசு வைரமுத்து, இப்போது சிறுகதை உலகிலும் தடம் பதித்து, வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். இதில் உள்ள 40 கதைகளையும் படிக்கும் எவருக்கும், கற்பனைக் கதைகளைப் படிக்கும் உணர்வு ஏற்படாது. ஏதோ ஒரு கட்டத்தில் நிகழ்ந்த அல்லது கேள்விப்பட்ட சம்பவங்களே நினைவுக்கு வரும். சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தன், தன் வாழநாள் முழுவதும் எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ நூறுதான். வைரமுத்து ஒரே மூச்சி 40 கதைகளை – அதுவும் உலகத் தரத்துக்கு ஒப்பான கதைகளை எழுதியிருப்பது, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக்கூடிய சாதனை. முதல் கதையான தூரத்து உறவு கதையைப் படிக்கத் தொடங்குபவர்கள், கடைசியாக உள்ள ராஜராஜன் கதையைப் படித்து முடிக்கும்வரை புத்தகத்தை கீழே வைக்க மாட்டார்கள் என்பது உறுதி. கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் உயிருள்ள மனிதர்களாக நம் நெஞ்சிலும், நினைவிலும் வலம் வருகிறார்கள். அவர்களுக்கு மரணம் என்பது இல்லை. தமிழ் இலக்கியத்தில் என்றென்றும் சீரஞ்சீவிகளாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். நன்றி: தினத்தந்தி, 21/10/2015.