ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு

ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு, பி. கோதண்டராமன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 362, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-152-5.html

ஆன்மிகப் பேருலகை வளப்படுத்தி, மக்களை நல்வழிப்படுத்த பல மகான்கள் அவ்வப்போது அவதரித்தவண்ணம் உள்ளனர். அவர்களுள் கொல்கத்தாவில் அவதரித்த பகவான் ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடத்தக்கவர். நாட்டுக்காகப் பல அருஞ்செயல்களைச் செய்தவர். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு சிறையிலிருந்தவர். வங்காளப் பிரிவினையை எதிர்த்து மக்கள் பேரெழுச்சி செய்தபோது, அவ்வியக்கத்தில் தம் முழுப் பலத்துடன் ஈடுபட்டவர். மிகச் சிறந்த கவிஞராகவும், பேராசிரியராகவும் பாஷ்யக்காரராகவும்( உரையாசிரியர்) விடுதலைப் போராளியாகவும் நாட்டுப்பற்று உடையவராகவும், ஆன்மிகவாதியாகவும், தத்துவஞானியாகவும், தலைசிறந்த அரசியல் ஞானியாகவும் சரித்திர பேராசிரியராகவும், நூலாசிரியராகவும் பன்முகத் தன்மை கொண்டு திகழ்ந்தவர் பகவான் ஸ்ரீ அரவிந்தர். இப்படிப்பட்ட அவதார புருஷர்களின் வரலாற்றை எழுதுவது எளிதானதன்று என்று கூறுவர். அதில் அரவிந்தருக்கும் உடன்பாடில்லை என்பதை எவரும் என் வாழ்க்கை எழுத முடியாது. ஏனெனில் அது மக்கள் எளிதில் காணக்கூடியவாறு மேற்பரப்பில் அமைந்ததன்று என்றும் சீடர்களே அவற்றில் ஏற்றி என்னைக் கொலை செய்வதை நான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். பகவான் ஸ்ரீ அரவிந்தர் தம்மைப் பற்றி சிறு குறிப்புகளைத் தவிர விரிவான வரலாற்றுப் பதிவுகள் எதையும் பதிவுசெய்து வைக்கவில்லை என்றாலும், இந்நூலில் ஸ்ரீ அரவிந்தர் பற்றிய பல அரிய செய்திகளைப் பதிவு செய்துள்ளது பிரமிக்க வைக்கிறது. ஸ்ரீ அரவிந்தர் அன்பர்களுக்கு இந்நூல் அருமருந்தாகும். நன்றி; தினமணி, 10/9/2012.  

—-

 

பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம், பாண்டு, கந்தகப் பூக்கள் பதிப்பகம், 120, குட்டியணஞ்சான் தெரு, சிவகாசி, பக். 100, விலை 100ரூ.

தன்னை சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களும்தான் கவிஞர் பாண்டுவின் கருவாய், விதையாய், கவிதையாய் மலர்ந்துள்ளது. அரசியல், பொருளாதாரம், சாதி, மத, மொழி, பாலியல் அதிகாரங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றங்களை உருவாக்குவதை கவிதைகளாய் வடிக்க சமூகப் பொறுப்பு வேண்டும். அது பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியத்தில் எங்கும் காணக்கிடைக்கிறது. பாராட்டும் இடத்தில் பாராட்டு, குட்டும் இடத்தில் குட்டு. அது மரபிலும் உண்டு. புதுக்கவிதையிலும் உண்டு. மொத்தத்தில் வாழ்க்கையின் பல கூறுகளைப் பேசும் கவிதைத் தொகுப்பு இது. சிவகாசியைச் சுற்றி வரும் கவிதை ஓட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் வாழ்வு பற்றிய பதிவு மட்டும் இல்லாமல் போனது ஏனோ? -இரா. மணிகண்டன். நன்றி; குமுதம், 11/9/2013.

Leave a Reply

Your email address will not be published.