ஹரி கதா சக்ரவர்த்தி எம்பார் விஜயராகவாச்சாரியார்

ஹரி கதா சக்ரவர்த்தி எம்பார் விஜயராகவாச்சாரியார், சங்கர் வெங்க்ட்ராமன், 99428990839, பக். 160+16, விலை ரூ. 100.

வைணவர்கள் வணங்கிப் போற்றும் உடையவர் என்ற ஸ்ரீ ராமானுஜரின் சீடர்களில் ஒருவரான என்பார் என்பவரின் பரம்பரையில் பிறந்தவர் ஆதலால், அந்தப் பட்டப் பெயருடன் எம்பார் விஜயராகவாச்சாரியார் என போற்றப் பெற்றார். அவருடைய வாழ்க்கை வரலாறு, சிறப்புகள், நிழற்படங்கள் முதலியவற்றை சிறப்பாகத் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் சங்கர். சிதம்பரத்தில் பிறந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று சிரோமணி பட்டம் பெற்று, தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்று இந்தி, தெலுங்கு முதலிய மொழிகளையும் கற்றவர் விஜயராகவாச்சாரியார். இசையிலும் சிறந்து விளங்கி, சங்கீத கலாநிதி பட்டமும் பெற்றவர். இயல், இசை, நாடகத்தன்மைகள் கலந்த ஹரி கதையில் இவர் ராமாயணம், பாரதம், ஆழ்வார்கள், பாசுரங்கள், வள்ளலார் சரித்திரம் முதலிய அனைத்தும் இடம் பெற்றன. வைணவ சைவ சமய வேறுபாடு கருதாதவர். வெளிநாடுகளிலும் ஹரி கதை நிகழ்த்தியவர். சீர்காழியில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், 1935ல் தொடங்கிய ஹரி கதை நிகழ்ச்சிகளை வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார். செய்து உவந்தார். பலப்பட பட்டங்களும் விருதுகளும் இவரைச் சேர்ந்து சிறப்புப்பெற்றன. எம்பார் கதை கூறிய முறையில் பார்வதி பரமசிவன் கதையையும் இந்நூலில் படித்து மகிழலாம். எம்பாரின் வாழ்க்கை வரலாற்றையும், பிறவற்றையும் அழகுடன் எழுதியுள்ள நூலாசிரியர் கிடைத்தற்கரிய படங்களையும் தொகுத்து நூலில் சேர்த்துள்ளமையையும் பாராட்டலாம். நூலை வாங்கிப் படித்து அன்பர்கள் பயன்பெறலாம். -பேரா. ம.நா. சந்தானகிருஷ்ணன்.  

—-

 

சாகா வித்தை அருளிய சித்தர்களின் யோக நெறிகள், ஆலந்தூர் ச. க. கங்காதர சங்கர், அனுவர்ஷினி அந்தர்யாமி பதிப்பகம், பக். 178, விலை 150ரூ.

இந்தியாவில், பலவகையான யோக முறைகள் பின்பற்றப்பட்டன. எனினும் பிற்காலத்தில், பதஞ்சலியின் யோக முறை மட்டுமே, அதிகளவில் பிரபலமானது. மற்ற யோக முறைகள், படிப்படியாக மறைந்தன. இந்த நூலில் சித்தர்களின் வழிமுறைகளைப் பற்றி, யோக முறைகளை ஆசிரியர் விளக்குகிறார். பிராணயாமம், ஆசனம் ஆகியவற்றை எப்படி செய்வது என, செய்முறை விளக்கங்களும் அளித்துள்ளார். முத்திரை வகைகள், சித்தர்கள் வரலாறு, கோவிலின் தத்துவம், சாப்பிட வேண்டிய உணவு வகைகள் என பல தலைப்புகளிலும் ஆசிரியர் விளக்கியுள்ளார். -விகிர்தன். நன்றி: தினமலர், 17/11/2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *